தினமும் பால் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
தினமும் பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சைவ உணவு பிரியர்களுக்கு பால் தான் புரதங்கள் நிறைந்த மூலமாக திகழ்கிறது.
பசும்பால் குடிப்பது உடல் எடை பராமரிக்க உதவுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள ஒருவராலும் பால் குடிப்பை முற்றிலும் தவிர்க்க முடியாது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் சத்துக்கள் பசும்பால் குடிப்பதால் கிடைக்கும் சத்துக்களும் சமமானதல்ல. தாய்ப்பாலில் தான் ஊட்டச்சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஒருபோதும் தவிர்க்கவே கூடாது.
புரதங்கள்:
பால் என்றால் புரதங்கள், புரதங்கள் என்றால் பால் என்று தான் அர்த்தம். சைவ பிரியர்களுக்கு பால் தான் புரத சத்துக்களுக்கு முக்கியமானது.
கால்சியம்:
பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளில் கால்சியம் நிறைந்துள்ளது. பற்ச்சொத்தை ஏற்படாமல் தடுக்கவும் எலும்பு மற்றும் பற்க்கள் வலிமை அதிகரிக்கவும் கால்சியம் உதவுகிறது.
எடை குறைய உதவுகிறது:
உடல் எடை குறைய கொலஸ்ட்ரால், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். பாலில் கலோரிகள், கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது.
வைட்டமின்கள்:
பாலில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் டி உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியம்:
பாலில் உள்ள கால்சியம் பற்க்கள் மற்றும் எலும்பு வலிமையை மேம்படுத்துவதோடு இதய தசைகளை வலிமையடைய செய்கிறது.
உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது:
பாலில் உள்ள தண்ணீர் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
பற்க்கள் மற்றும் ஈறு :
பால் பற்க்களின் மேல் உள்ள எனாமல் பாதுகாக்க உதவுகிறது. குளிர்பானங்கள் குடிப்பதை நிறுத்துவது பற்க்கள் ஆரோக்கியத்தியத்தை மேம்படுத்துகிறது.
Comments
Post a Comment