புகைப்பதினால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்

புகைப்பதினால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்

புகையிலை உயிரைக் கொல்லும் என்று எத்தனை முறை கூறினாலும் மதிப்பதில்லை. புகையிலை பயன்படுத்துவதால் பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.



புகைப்பதினால் உடனடியாக எந்த விளைவுகளும் ஏற்படவில்லை என்றாலும் விளைவுகள் மோசமானது.
புகையிலை ஒரு போதும் நமக்கு நன்மை பயக்காது. எனவே புகையிலை ( புகைப்பதை ) அடியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். சிகரெட்டில் 600 வகையான வேதி பொருட்கள் நிறைந்துள்ளது. இந்த 600 வேதி பொருட்களும் சிகரெட்டை பத்த வைக்கும் போது வேதி வினைக்கு உட்பட்டு 7,000 ஆக மாறுகிறது.

நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது:

புகையிலையில் தவிர்க்க முடியாத முக்கிய வேதி பொருள் நிக்கோட்டின். நிக்கோட்டின் நரம்பியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைகிறது. புகைப்பதை கைவிடவும் நிக்கோட்டின் தான் பயன்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதை தடுக்க உதவும் நிக்கோட்டின் மாத்திரையில் மிக குறைவாக நிக்கோட்டின் உள்ளது. நிக்கோட்டின் பயன்படுத்த புகையிலை பழக்கத்தை படிப்படியாக குறைக்க முடியும்.

சுவாச கோளாறுகள:

புகைப்பதினால் வெளியேறும் புகையை உள் இழுப்பதினால் சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது. பல நோய்கள் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும். முக்கியமான ஒன்று சுவாச கோளாறுகள்.

நுரையீரல் புற்றுநோய்:

நுரையீரல் புற்றுநோய் சுவாச கோளாறுகளில் ஒன்று தான். குழந்தைகள் இருக்கும் வீட்டில் புகைப்பதினால் குழந்தைகளுக்கும் நுரையீரல் புற்றுநோய் வரக்கூடும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிக குறைவு. எனவே குழந்தைகளுக்கு அருகில் புகை பிடிக்காதீர்.

இதய கோளாறுகள்:

புகைப்பதினால் இதய நாளங்கள் இறுக்கமாகி இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து புகைப்பதினால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி