தமிழர்களிடம் இருந்து உலகம் கற்றுக்கொண்ட 'சாப்பிடும் முறைகள்'!
தமிழர்கள் தான் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்துள்ளனர் என்பதை நமது வரலாற்று ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. பண்பாடு, கலாச்சாரம், வீரம், கலை, நாகரீகம், மருத்துவம் என அனைத்திலும் முன்னோடியாக வாழ்ந்தனர் தெரிந்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஆரோக்கியமான உணவுகள் உண்டு நொடுநாள் சிறப்பாக வாழ்ந்துள்ளார்கள். தமிழர் உணவியலின் பன்னிரண்டு முக்கிய சாராம்சங்களை இங்கே பார்ப்போம்.
1. அருந்துதல்:
மிகவும் சிறிய அளவியே உட்கொள்ளுதலே அருந்துதல் என்கிறனர். பழரசம் போன்றவற்றை குறைந்த அளவிலேயே அருந்துவதே மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளனர்.
2. உண்ணல்:
பசிக்கும் போது சாப்பிடுவது. அதாவது பசிக்கும் போது மட்டுமே சாப்பிடவேண்டும். அதுவும் பசி நீங்க முழுமையாக சாப்பிடுவது உண்ணல் என்று தெரிவிக்கின்றனர்.
3.உறிஞ்சல்:
நீர் ஆகாரத்தை வாயை குவித்து ஈர்த்து உட்கொள்வது. இப்படி உணவை உட்கொள்வது என்பது மிகவும் உடலுக்கு மிகவும் உறுதியை ஏற்படுத்துகிறது.
4. குடித்தல்:
நீர் போன்ற உணவினை சிறிது சிறிதாக உட்கொள்வது. உணவினை குடிக்கும் போது பசி நீங்க குடிக்க வேண்டும்.
5. தின்றல்:
தின்பண்டங்களை தான் தமிழர்கள் தின்றல் என்று குறிப்பிடுள்ளனர். அவசம் இன்றி சாப்பிட வேண்டும் மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
6. துய்த்தல்:
உணவிவை ரசித்து சுவைத்து சாப்பிடுவது என்று குறிப்பிடுகின்றனர். எந்த உணவாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு சுவைத்து சாப்பிட வேண்டும்.
Comments
Post a Comment