ஷாக்: சைவ உணவுகளில் சேர்க்கப்படும் அசைவ பொருட்கள்..!
நம்மில் சிலர் சுத்தமான சைவ உணவு சாப்பிடுபவராக இருப்பார்கள். அதற்காக அவர் கேக் போன்றவற்றையும் “எக்லஸ் கேக்” என்று தான் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் ஹோட்டலுக்கு சென்றாலும் சைவ ஹோட்டலா என்று பார்த்துவிட்டு செல்வார்கள். அப்படி நீங்கள் சைவ ஹோட்டலுக்கே சென்றாலும் அதிலும் சில அசைவு உணவுப்பொருள் சேர்க்கப்படுகின்றன. அது அவர்களுக்கு தெரிந்திருக்க வைப்பில்லை.
சாலட்:
நீங்கள் சாப்பிடும் வெஜிடபிள் சாலட்டில் காய்கறிகள் தான் இருக்கு என்று நினைத்து சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் சாலட்டில் சுவைக்காக சேர்க்கப்படும் சாஸில் சுவைக்காக முட்டை சேர்க்கப்படுகிறது.இது அனைத்து விதமான சாஸ்களிலும் சேர்க்கபடுகிறது.எனவே நீங்கள் சாஸ் வாங்கும்போது அதன் லேபிளை நன்கு படித்த பிறகு பயன்படுத்துங்கள்.
சூப்:
வெவ் சூப் தானே இதில் எப்படி அசைவம் கலந்திருக்கும் என்று நினைத்து கொண்டியிருப்பிர்கள், ஆனால் அது தவறு. சூப் மிகவும் சுவையாக இருக்க சூப்புடன் தரப்படும் சாஸில் மீன் பவுடர் கலந்திருக்கும் என்பது இங்கு பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சீஸ்:
நாம் அனைத்து வித உணவுகளிலும் சீஸ் சேர்க்கப்படுகிறது. இது சைவம் என்று நினைத்திருப்பிர்கள். ஆனால் சீசில் என்சைம் எனும் விலங்கின கொழுப்பு கலந்துள்ளது. நீங்கள் லேபிளை சரிபார்த்துக் கொள்வது நல்லது. கொழுப்பு கலக்காத சீஸ்களும் மார்கெட்டில் கிடைக்கின்றன.
ஜெல்லி:
சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி உண்மையிலே ஓர் அசைவ உணவு. ஜெல்லியில் பயன்படுத்தப்படும் பொருள் ஜெலட்டின் பவுடர் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்படுகின்றன.
சர்க்கரை:
சர்க்கரையில் எப்படி என்று யோசிப்பிர்களா? ஆம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் கலக்கப்படும் நேச்சுரல் கார்பன் விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது தான் உண்மை.
Comments
Post a Comment