மனத்தெளிவு உங்களுக்கு வேண்டுமா?


அனைவருக்கும் வணக்கம்,நம்மில் பலருக்கு ஒரு செயலை செய்வதில்   அல்லது பல விஷயத்தில் மன தெளிவு இல்லாமல் இருக்கும்.

முதலில் நமக்கு ஏன் தெளிவு இல்லை என்று பார்ப்போம்.நம்மிடத்தில் ஒரு தெரியாத செயலை செய்ய சொன்னாள் பலருக்கு செய்ய தெரியாதுதான்.எனவே மனத்தெளிவு இல்லாததற்கு காரணம் மனஅழுத்தமோ அல்லது வேறு எந்த பிரச்சனையும் அல்ல  சரியான புரிதல் மற்றும் தெரிதல் இல்லாததூதான் (அறியாமை). 

நாம் ஒரு செயலை செய்வதில் மட்டும் அல்ல, நாம் அனுதினமும் செய்யும் அனைத்து செயல்களிலும் மனத்தெளிவு அவசியம்.

நாம் செய்கின்ற காரியத்தில்  எதாவது குழப்பம் ஏற்ப்பட்டால் அதில் நாம் அறியாத விஷயம் உண்டு.எனவே எந்த செயலையும்  அறிந்து/புரிந்து செய்தால் மனக்குழப்பம் இல்லை.(வராது)‌‌.

நம் வாழ்வில் அறியாமை அதிகம் வளர்ந்து கொண்டே வருகிறது.

Example: வாழ்க்கையில் பலருக்கு உயர்ந்த நிலையில் வர வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும்.யோசித்து பாருங்கள் இது நாம் எடுத்த முடிவா ? இல்லை இந்த சமுதாயம் இதுதான் உண்மையான உயர்வு என்று நம்மை ஏமாற்றி எடுக்க வைத்த முடிவா? வாழ்க்கையில் முன்னேற்றம் தவறில்லை,ஆனால் சிறுவயதிலேயே பிறருக்காக  அதிகம்  சிந்திக்காமல் அவனவன் தனக்காக மட்டும் சிந்தித்து செயல்பட வைக்கிறது.எனவே மனிதனிடம் சுயம் வளர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் அன்பு குறைந்து போகிறது.

ஆகவே நாம் விரும்பும் விருப்பங்கள் கூட நம்முடையதல்ல,இந்த சமுதாயம் நம்மை விரும்பச்செய்கிறது.கருத்து என்னவெனில் நாம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உபயோகப்படுத்தும் பொருள் அல்லது வாழ்வின் கொள்கைகள் நாம் சரி என்று அறிந்ததா?அல்லது இந்த சமுதாயம் சரி என்று நமக்குள் புகுத்தியதா? அறியாமையை அறிந்தால் மனத்தெளிவு உண்டாகும்.நன்றி.....


Comments

  1. நன்றி நண்பரே.. நீங்கள் வாழ்வின் அர்த்தம் என்ன என புரிந்து கொண்டிர்கள்
    என தெரிய விரும்புகிறேன்.
    நன்றி..,..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்