அதிக மைலேஜ் பெற உதவும் வழிமுறைகள் என்னென்ன?..

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால், நமது வாகனத்தின் மைலேஜ் திறனை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கு உதவும் வழிமுறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

சரியான காற்று: டயர்களில் சரியான அளவில் காற்றை நிரப்பி, சீராகப் பராமரித்து வரவேண்டும். இதனால், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு 5% கூடுதல் மைலேஜ் கிடைக்கிறது. சீரற்ற வகையில், டயர்களில் காற்றழுத்தம் இருந்தால், எரிபொருள் அதிகமாக உறிஞ்சப்படும்.

லோ ரோலிங் ரெசிஸ்டென்ஸ் டயர்கள்: இவை தரையில் குறைந்த உராய்வு விசையை கொண்டிருப்பதால் அதிக தேய்மானம் ஆவது இல்லை. இந்த டயர்கள் உபயோகிப்பதன் மூலம் 5% முதல் 15% கூடுதல் மைலேஜ் கிடைக்கிறது.

இன்ஜின் டியூனிங்: புதிதாக வாங்கப்பட்ட வாகனம் அதிக பிக் அப் கொண்டதாக இருக்கும், இது, இன்ஜின் ஆற்றலை அதிகரிக்கும். இதனை ஓரளவு குறைத்து டியூனிங் செய்வது மைலேஜ் கூடுதலாக கிடைக்க உதவும்.

ஏர் ஃபில்டர்: தூய்மையற்ற ஏர் ஃபில்டர்கள் உபயோகிக்கும் போது அது மைலேஜை நேரடியாக பாதிக்கும். வாகனம் இயக்கப்படாமல் இன்ஜின் மட்டும் இயங்கினால் அது தானாக ஆஃப் ஆகி விடும். ஏர் ஃபில்டரை சரியான கால நேர இடைவெளியில் மாற்றிக் கொள்வது நல்லது.

எரிபொருள் அளவு: சிலர் எப்போதும் ரிசர்விலேயே வாகனம் ஓட்டுவார்கள். இது எரிபொருள் சிக்கனத்திற்கு எதிரானதாகும். இதனால், ஃபியூயல் பம்ப் அதிக அளவில் எரிபொருளை உபயோகிக்க உந்தப்படும். எனவே குறைந்தபட்சம் அரை டேங்க் அளவு எரிபொருள் வைத்திருப்பது மைலேஜை அதிகரிக்க உதவும்.

குறைந்த வேகம்: பொதுவாக குறைந்த அளவிலான வேகத்தில் செல்வது எரிபொருள் சேமிப்பிற்கு உதவும். குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்கும் போது 33% எரிபொருள் சேமிப்பை தருகிறது.

பிரேக் பிடிப்பதை குறைத்தல்: வாகனத்தில் செல்லும் போது கூடுமான வரையிலும் பிரேக் பிரயோகிப்பதை குறைக்க வேண்டும். இதற்கு வாகனத்தை சீரான வேகத்தில் இயக்குதல் அவசியமாகிறது. பிரேக் பிரயோகிக்கும் போது அது அதிகபட்ச எரிபொருளை செலவழிக்கிறது என்பதனை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்