தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி!!!

வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக தர்பூசணி கருதப்படுகிறது.தர்பூசணியில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன.தர்பூசணியில் பசலைக் கீரைக்குச் சமமான அளவு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.வைட்டமின் சி,ஏ,பி6 பி1 உள்ளன.பொட்டாசியம்,மெக்னீசியம் போன்ற தாது உப்புக்களும் காணப்படுகிறது.100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி,கார்போஹைட்ரெட் 7 சதவீதம் உள்ளது.

தர்பூசணியில் உள்ள பைட்டோ நியூட்ரின்ஸ் என்ற சத்துக்கள் உடம்பை ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும்.தர்பூசணியைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது.அது இருதயத்தையும்,இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோயாளிகளுக்கும்,இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறது.கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ,மூளை மற்றும் செல் பாதிப்பைத் தடுக்க வைட்டமின் சி ஆகியவற்றை கொண்டு செயல்படுகிறது.

தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும்,இரத்த அழுத்தத்தையும் சரி செய்து கொள்ளமுடியும்.கட்டி,ஆஸ்துமா,பெருந்தமனி வீக்கம்,நீரிழிவு,பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்துக் கொள்ளமுடியும்.

தமனி இரத்த ஓட்டம்,இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது.உடலிற்குத் தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும்.தர்பூசணியின் விதையும் பலன் தரக்கூடியது.விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.தர்பூசணி தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்