அஞ்சலட்டை வரலாறு உங்களுக்கு தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
அஞ்சலட்டை என்பது தகவல்களை எழுதி, உறை எதுவும் இல்லாமலேயே சேரவேண்டியவருக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான செவ்வக வடிவத்தில் வெளியிடப்படும் தடித்த தாள் அல்லது மெல்லிய அட்டை ஆகும். இதை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான அஞ்சல் கட்டணம், உறையில் இட்டு அனுப்பும் கடிதங்களுக்கு ஆகும் கட்டணத்தை விடக் குறைவு. சில அஞ்சல் அட்டைகளில் அஞ்சல் கட்டணம் செலுத்தப்பட்டதைக் குறிக்கும் அஞ்சல்தலை போன்ற வடிவம் அச்சிடப்பட்டிருக்கும். சில அட்டைகளில் இது இருக்காது.
அனுப்புபவர் தனியாக அதற்குரிய அஞ்சல்தலையைத் தனியாக வாங்கி ஒட்டவேண்டும். கட்டணம் அச்சிடப்படாத அட்டைகளைத் தனியார் நிறுவனங்களோ, பிற அமைப்புக்களோ, தனியாட்களோகூட அச்சடித்துக்கொள்ள முடியும். ஆனால், அஞ்சல் கட்டணத்தோடு கூடிய அட்டைகளை அதிகாரம் அளிக்கப்பட்ட அஞ்சல்சேவை அமைப்புக்களே வெளியிடுகின்றன.
ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவை தபாலட்டை, குறைந்தது 3-½ அங்குல உயரம் x 5 அங்குல நீளம் x .007 அங்குலத் தடிப்புக் கொண்டதாகவும், 4-¼ அங்குல உயரம் x 6 அங்குல நீளம் x .016 அங்குலத் தடிப்புக்கு மேற்படாத அளவு கொண்டதாகவும் உள்ள செவ்வக வடிவமானது என வரையறுக்கின்றது. எனினும் சில அஞ்சலட்டைகள் இவ்வரையறைகளில் இருந்து விலகியும் காணப்படுகின்றன.பிலடெல்பியாவைச் சேர்ந்த ஜான் பி. சார்ல்ட்டன் (John P. Charlton) என்பவர் 1861 ஆம் ஆண்டில் அஞ்சலட்டைக்குக் காப்புரிமை பெற்றுகொண்டார். இவ்வுரிமையை அவர் எச். எல். லிப்மன் என்பவருக்கு விற்றார். "லிப்மனின் அஞ்சலட்டை" என்னும் பெயரில் அழகூட்டப்பட்ட கரைகளுடன் கூடிய அஞ்சலட்டைகளை இவர் வெளியிட்டார். 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளும் அஞ்சலட்டைகளை வெளியிடத் தொடங்கின.
அமெரிக்காவின் முதல் அஞ்சல் அட்டை, மசச்சூசெட்சின் இசுப்பிரிங்ஃபீல்டில் இருந்த மோர்கன் கடித உறைத் தொழிலகத்தால் 1873ல் வெளியிடப்பட்டது.[1][2] அந்த அஞ்சல் அட்டையில் சிக்காகோவில் நடைபெற்ற பல மாநிலக் கைத்தொழில் கண்காட்சியின் படம் அச்சிடப்பட்டிருந்தது.[3] ஐக்கிய அமெரிக்க அஞ்சலகம் அஞ்சல்தலையிடப்பட்ட அட்டைகளை 1873 ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கியது. மக்கள் விரைவான குறிப்புக்களை இலகுவாக அனுப்புவதற்கான வழிகளை விரும்பியதன் காரணமாகவே அஞ்சலட்டைகள் வெளியிடப்பட்டன. அஞ்சலகம் மட்டுமே அஞ்சலட்டைகளை வெளியிட அனுமதிக்கப்பட்டது. இத் தனியுரிமை 1898 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருந்தது. 1998 ஆம் ஆண்டில் அமெரிக்கக் காங்கிரசு, தனியார் நிறுவனங்களும் அஞ்சல் அட்டைகளை வெளியிடும் வகையில் "தனியார் அஞ்சல் அட்டைச் சட்டமூலம்" என்னும் ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றியது.
தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்க அரசு, தனியார் நிறுவனங்கள் தமது அட்டைகளை "அஞ்சலட்டைகள்" என அழைப்பதைத் தடை செய்திருந்தது. இதனால் அவை "நினைவு அட்டைகள்" என அழைக்கப்பட்டுவந்தன. 1901 ஆம் ஆண்டில் இத்தடை நீக்கப்பட்டது.
1893ல் சிக்காகோவில் நடைபெற்ற "உலக கொலம்பியக் கண்காட்சி"யை விளம்பரப்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சலட்டைகள் வெளியிடப்பட்டன. சில காலத்தின் பின்னர், அமெரிக்க அரசு, ஐக்கிய அமெரிக்க அஞ்சலகத் திணைக்களம் மூலம் ஒரு சதம் பெறுமதி கொண்ட அஞ்சலட்டைகளைத் தனியாரும் வெளியிட அனுமதித்தது. அக்காலத்தில் அட்டைகளின் முன்பக்கத்தில் மட்டுமே அனுப்புபவர்கள் விடயங்களை எழுதலாம் என்னும் கட்டுப்பாடு இருந்தது. 1908 ஆம் ஆண்டிலேயே முகவரி எழுதும் பக்கத்திலும் தகவல்களை எழுத மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.[3]
1893 ஆம் ஆண்டின் கொலம்பியக் கண்காட்சியின் விளைவாக அரசு வெளியிட்ட அஞ்சல் அட்டைகளும், தனியார் வெளியிட்ட நினைவு அட்டைகளும் பெரும் வரவேற்புப் பெற்றன. கட்டிடங்களின் படம் அச்சிடப்பட்ட இவ்வாறான அட்டைகள் கண்காட்சியின்போது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 1908 ஆம் ஆண்டில் 677 மில்லியன்களுக்கு மேற்பட்ட அஞ்சலட்டைகள் அஞ்சல் செய்யப்பட்டிருந்தன.
Comments
Post a Comment