குழந்தை பருவத்தில் நாம் உண்மையென நினைத்த மிகப்பெரிய பொய்கள்

இந்த உலகத்தில் நம் உருவ அமைப்பில் இன்னும் ஆறு நபர்கள் இருப்பார்கள் என்பதும் மேலும் அந்த ஆறு நபர்களை நாம் ஒரு நாள் பார்ப்போம் என்பதும் இந்த கூற்று பெரும்பாலும் நமக்கு திரைப்படங்களே தோற்றுவித்தது.

காகம் நம் வீட்டின் கூரையில் அமர்ந்து கரைந்தால் வீட்டிற்கு சொந்தங்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்திருப்பார்கள் பெரும்பாலும் இது போல் காகம் கரைவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தவர்கள் பலர் உண்டு.

நெற்றியில் இருக்கும் கோடுகளை வைத்தே அவர் எவ்வளவு அறிவாளி என நினைத்தது நம்முடைய சில நண்பர்களை வைத்தே இது பொய் என்பதை நாம் அறியலாம்.

பள்ளி கணிணியில் பயிற்சி துவங்குவதற்கு கணிணியை ஆன் செய்ய்ய நிறைய பொத்தான்களை அழுத்த வேண்டும் அதனால் ஆசிரியர் நம்மை விடாமல் அவரே ஆன் செய்து தருகிறார் என்பது நம்முடைய எண்ணமாக இருக்கும்.

நிறைய மிட்டாய்களை பிஸ்கட்களை உட்கொண்டால் அது உங்கள் பற்களில் பூச்ச்களை உண்டாக்கும் என்பது.

விதைகளை முழுங்கினால் அது உங்கள் வயிற்றில் மரம் வளர வைத்துவிடும் எனபது.

பிரபல ஆங்கில தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மல்யுத்த போட்டி உண்மையென நினைத்துகொண்டிருந்தது.

ஜீபூம்பா பென்சில் எனும் தொடர் பல வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமான ஒன்று ஒரு படத்தை வரைந்தால் அது நிஜமாக தோன்றும் என்பது அந்த தொடரின் கதை இதே போல் பென்சில் உண்மையென நம்பி கடைகளில் பலறும் வாங்கி நிறைய செலவு செய்ததுண்டு.

என்னதான் இவைகள் போல பல பொய்கள் நம்மை ஏமாற்றி இருந்தாலும் இந்த பொய்கள் நமக்கு கொடுத்த மகிழ்ச்சியை இப்போது இருக்கும் தொழில்நுட்பங்கள் தருவதில்லை என்பது தான் உண்மை.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்