புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டிய பத்து விஷயங்கள்



ஜிம் (உடற்பயிற்சி சாலை)செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அக்காலத்தில் ஜிம் சென்றவர்கள் தங்கள் உடல் நலம் வளம் பெற, ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி செய்தார்கள். ஆனால் இன்றோ அது பேஷனாகி விட்டது. அதிலும் உடல் பெரிதாக வேண்டும், போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி பெருமை கொள்கிறார்கள். அது முற்றிலும் தவறு. சரி,இப்போது முதன்முதலாக ஜிம் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய பத்து விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. நல்ல உடற்பயிற்சி சாலையை தேர்ந்தெடுங்கள்.

2. ஜிம்முக்கு சேரும் ஒரு வாரத்திற்கு முன்பு உங்கள் வீட்டில் வார்ம் அப் செய்து பழகுங்கள்.

3. ஜிம்மில் சேர்ந்தவுடன் முதல் நாள் உபகரணங்களையும் பயன்படுத்தத் தோன்றும்.அதை மட்டும் செய்யாதீர்கள்.

4. உடற்பயிற்சி ஆசிரியரின் ஆலோசனைகளை எந்த ஒரு காணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ள மறக்காதீர்கள்.

5. ஒரு மாதத்திற்கு லைட் வெயிட் உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும்.

6. எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு சப்ளிமெண்ட்களையும் உபயோகப்படுத்தக் கூடாது.

7. அடுத்தவர்களை பார்த்து உடற்பயிற்சி செய்யக் கூடாது. அது உங்கள் வழக்கமுறையை பாதிக்கும்.

8. தினமும் காலையில் எழுந்தவுடன் இன்று ஜிம் செல்லவில்லையென்றால் நோய் வந்து விடும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். தினசரி ஜிம் செல்லும் பழக்கம் தானாக வந்து விடும்.

9. முறையான உணவு முறையை பின்பற்ற வேண்டும். ஆல்கஹால் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

10. தினமும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஸ்ரெட்சிங் செய்து கொள்ள வேண்டும். இது எலும்புகளில் தேவையற்ற வலிகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

மேற்கூறிய பத்து விஷயங்களை பின்பற்றினாலே போதும். உங்கள் வழக்கமுறையே மாறி விடும். மனம், உடல் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்து நிம்மதியாக வாழுங்கள். நன்றி.வணக்கம்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி