பரோட்டா பற்றி அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!



ஒரு காலத்தில் புரோட்டா என்றால் நமக்கு என்ன என்று கூட தெரியாது.அப்போதெல்லாம் பெரிய நகரங்களில் உள்ள ஓட்டல்களில் மட்டுமே புரோட்டா கிடைக்கும். மட்டன் அல்லது சிக்கனை புரோட்டாவோடு கலந்து சாப்பிடும் போது இந்த ருசிக்கு நமது நாக்கு அடிமையாகி போனதால் எல்லோரும் புரோட்டாவை நோக்கி செல்ல, இப்போது பட்டி தொட்டி எல்லாம் புரோட்டா கடையாக மாறி விட்டது. 

இரவில் 4 புரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல் இருக்கிறது. ஆனால், இந்த புரோட்டா உங்கள் உடலையே பதம் பார்க்கிறது என்பது உங்களுக்கே தெரியாது. பல நோய்களுக்கு இந்த புரோட்டாதான் காரணமாக இருக்கிறது.

சாப்பிடுவதற்கு லாயக்கற்ற பொருளான மைதா மாவினால் இந்த புரோட்டா தயார் செய்யப்படுகிறது.

மைதா மாவு கோதுமையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், கோதுமையில் உள்ள நன்மை பயக்கும் விஷயங்கள் எல்லாம் அகற்றப்பட்டு தயாரிக்கப்படும் வெறும் சக்கைதான் இந்த மைதா மாவு.அதுவும் மைதா மாவை தயாரிப்பதற்கு பல ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதன் காரணமாக மைதா மாவே சாப்பிடுவதற்கு லாயக்கற்ற பொருளாக இருக்கிறது.

மைதா மாவை மென்மையாக்குவதற்காக ‘அலாக்சான்’ என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு எலிக்கு அந்த நோயை உருவாக்கி பின்னர் அந்த மருந்தை செலுத்தி பரிசோதிப்பார்கள். அந்த எலிக்கு நோயை உருவாக்குவதற்காக கொடுக்கப்படும் மருந்துதான் அலாக்சான்.

இந்த மருந்தை எலிக்கு கொடுத்ததும் அதனுடைய கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்களை அழித்து விடும். இதன் மூலம் அந்த எலிக்கு நீரிழிவு நோய் ஏற்படும். மேலும் பலவித நோய்களும் உருவாகும். அவற்றுக்கு மருந்து கொடுத்து அதை பரிசோதிப்பார்கள்.

எலிகளுக்கு கொடுக்கப்படும் அதே அலாக்சான் மைதாவில் கலக்கப்படுவதால் அதை சாப்பிடும் போது, நமக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மேலும் மைதாவில் பூஞ்சை உருவாகாமல் இருப்பதற்கு ‘மேக்கரிங்’ என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவும் உடல் நலத்தை கெடுக்க கூடியது.

மைதாவின் சுவையை கூட்டுவதற்காக மோனோ சோடியம் குளுட்டோ மேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது, மூளை திசுக்களை பாதிக்கிறது. இதனாலும் பலவித நோய்கள் ஏற்படுகின்றன.

மைதா மாவு முழுமையாக தயாரிக்கப்படும் முன்பு மஞ்சள் நிறமாக இருக்கும். அதை வெள்ளையாக மாற்றுவதற்காக ‘பென்சாயில் பெராக்சைடு’ என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது ஒரு மோசமான ரசாயன பொருள் ஆகும். தலைமுடிக்கு அடிக்கப்படும் ‘டை’யில் இந்த ரசாயனம் கலக்கப்படுகிறது. பினாயில், பிளீச்சிங் பவுடர்களிலும் இது இருக்கிறது. இதை மாவில் கலக்கும் போது நீரிழிவை ஏற்படுத்துகிறது.

இப்படி எல்லா வகையிலும் உடலுக்கு மோசமான கெடுதலை ஏற்படுத்தும் உணவாக புரோட்டா உள்ளது.இப்போது தமிழர்களின் முக்கிய உணவாக புரோட்டா என்ற வடிவில் மைதா மாவு மாறி இருக்கிறது. சில நாடுகளில் மைதா மாவை பயன்படுத்துவதையே தடை செய்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்