கோடை வெயிலில் கூந்தல் வெடிப்பை தவிர்க்க இதல்லாம் பண்ணுங்க

குளிரைச் சபித்து, கோடைக்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது வெயிலைத் திட்டத் தொடங்கியிருக்கிறார்கள். கோடை சீசன் முழுவதுமாக ஆரம்பிப்பதற்கு முன்பே, அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வியர்வை வழிந்து எப்போதும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிற வாடையை சகித்துக்கொள்வது பலரும்

எதிர்கொள்கிற சவால். அதிலிருந்து விடுபட இயற்கையான வழிகளைக் கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா.





தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் வைத்திருந்து அலசவும். இது வியர்வை சேர்ந்து, கூந்தலில் இருந்து வரும் வாடையைத் தவிர்க்கும்.

சிறிதளவு தண்ணீரில் புதினா இலைகள் சேர்த்துக் கொதிக்க வைத்து மூடி வையுங்கள். ஆறியதும் அந்தத் தண்ணீரை குளிக்கும் நீருடன் கலந்து உபயோகித்தால் வியர்வை வாடை வீசாது.





தண்ணீரில் அரோமா ஆயில் கலந்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். காலை நேரத்தில் பெப்பர்மின்ட், வெட்டிவேர், ஜாஸ்மின் அல்லது யிலாங் யிலாங் போன்றவற்றில் ஒன்றையும், இரவில் லேவண்டர் ஆயிலையும் 5 துளிகள் கலந்து குளிக்கலாம். பகல் நேரத்தில் மனதை உற்சாகமாக வைக்கவும், இரவில் ஆழ்ந்த உறக்கத்துக்கும் இவை உதவும். உடலில் இயற்கையான நறுமணத்தை உணர்வீர்கள்.

குளித்ததும் உடலில் ஈரத்தை நன்கு துடைத்த பிறகே உடை அணியவும். ஈரப்பதம்கூட துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சுத்தமான சந்தனத்துடன், முல்தானி மிட்டியும், கலப்படமில்லாத ரோஸ் வாட்டரும் கலந்து வியர்வை அதிகமுள்ள இடங்களில் தடவி, காய்ந்ததும் கழுவலாம்.

அக்குள் பகுதியில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்றுங்கள். எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அக்குள் பகுதியில் தேய்த்து, அந்தச் சாறு உலரும்படி விடவும். பிறகு குளிக்கலாம். கோடை முடியும்வரை தினமும் இதைச் செய்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.




துளசி மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, அக்குள், மார்பகங்களுக்கு அடியில், இன்னும் வியர்வை அதிகம் சுரக்கும் உடல் பகுதிகளில் தடவவும். சிறிது நேரம் கழித்துக் குளித்தால், பாக்டீரியா தொற்று தவிர்க்கப்படும். வியர்வை வாடையும் குறையும்.

அதிக மசாலா, அசைவ உணவுகளைத் தவிர்க்கவும். அவற்றை உண்பதன் மூலமும் சருமத் துவாரங்களின் வழியே கோடை நாள்களில் வாடை வெளியேறுவதை உணர்வீர்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கோதுமைப்புல் சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டால், அதிலுள்ள குளோரோபில், வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

குளிக்கும் தண்ணீரில் சிறிது வெள்ளை வினிகரைக் கலந்து உபயோகிப் பதும் வியர்வை நாற்றத்தைக் கட்டுப் படுத்தும்.

சோற்றுக்கற்றாழை இலைகளைக் கீறி, உள்ளே சிறிது வெந்தயத்தை வைத்து மூடுங்கள். மறுநாள் அந்தச் சதைப் பற்றோடு வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசவும். இது வாடை நீக்கும். வளர்ச்சிக்கும் உதவும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி