கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!
பாய்களில், படுக்கைகளில் பல வகைகள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப படுக்கை வாங்கி பயன்படுத்தினர். ஒவ்வொரு பாய்க்கும், படுக்கைக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாய்களில் தீமை தான் நிறைந்து இருக்கின்றன. இந்த வகையில் கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்…
தயாரிப்பு முறை!
கோரைப் பாய் ஆனது ஆற்றின் ஓரத்தில் வளர்கின்ற கோரைப் புற்கள் கொண்டு தயாரிக்கப்படும் பாய் ஆகும். கோரைப் புற்கள் ஆரம்பத்தில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்பிடிப்பு நிலத்தில் வளர்வதால் உறங்க சுகமான அனுபவம் அளிக்கும். உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சி அடைய செய்யும்.
உறக்கம்!
உடலில் சூடு அதிகரிக்கும் போது உறக்கம் கெடும். கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
காய்ச்சல்!
உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் காய்ச்சலும் குணமாகும் என கூறப்படுகிறது. அதிக உடல் சூட்டல் உண்டாகும் காய்ச்சலை தன் குளிர்ச்சி குணம் கொண்டு சரி செய்கிறது கோரைப் பாய்.
பழமொழி அர்த்தம்!
பேச்சு வழக்கு பழமொழி: கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! உண்மை பழமொழி: கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை!
பொருள்!
கழு என்பது ஒருவகையான கோரைப் புல். அதில் தைக்கப்பட்ட பாயில் படுத்து உறங்கும் போது நாசியில் கற்பூரம் போன்ற வாசனை அடிக்கும். இந்த வாசனைக்கு பூச்சிகள் அருகே நெருங்காது. இதனால், குழந்தைகளை பூச்சி கடியில் இருந்து காக்க இந்த பாய் பயன்படுத்தினர். காலப்போக்கில் இது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என மருவிவிட்டது.
Comments
Post a Comment