இயற்கையாக உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்



உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும், அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள். 

இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க  ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம் .

இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால், அவை ஒருவருக்கு தேவையான உடல் எடையைப் பராமரிக்க உதவும். பொதுவாக இந்த பழங்களை உடல் எடையை குறைக்கத் தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் இந்த பழங்களானது ஒருவரின் உயரத்திற்கு தேவையான உடல் எடையைப் பெறவும் உதவியாக இருக்கும். இங்கு உடல் எடையை அதிகரிக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

அவகேடோ

எடையை அதிகரிக்க வேண்டுமானால் அவகேடோவை சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றின் ஒரு பெரிய பழத்தில் 322 கலோரிகள் உள்ளது. மேலும் இவற்றில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவை இதயத்திற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்கும். மேலும் 5 பேரிச்சம் பழத்தில் 114 கலோரிகள் நிறைந்துள்ளது.

கேரட், பீட்ரூட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுகின்றது, மாதுளையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன.

பாலுடன் கேரட் அல்லது பீட்ரூட் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நலன் தருவதுடன், எடையும் அதிகரிக்கும்.

நட்ஸ்

வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது.

இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது.

தினமும் சிறிதளவேனும் உலர் பழங்களை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க நிச்சயம் உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவில் கலோரிகள் உள்ளது, எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பழமாக இருக்கும்.

அத்திப்பழம்

ஒரு அத்திப்பழத்தில் 111 கலோரிகள் உள்ளது, தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி