உடல் சூட்டால் அவதிப்படுபவர்களா? இதோ அதற்கான தீர்வுகள்!
உடல் சூடு என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நமது உடலை பல்வேறு நோய்கள் தாக்கிவிடும். இதில் அதிக கவனம் எடுக்காமல் இருந்தால், வாய்ப்புண், நாக்குப்புண், வயிற்றில் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் உருவாகும். இந்த உடல் சூட்டை போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளன.
வாரத்தில் ஒருமுறையாவது நல்லெண்ணெய்யை தேய்த்து குளியல் எடுத்துக் கொள்வது உடற்சூட்டிற்கு சிறந்த பலனை தரும். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். உடலில் வெப்பநிலை சமநிலையில் பேணப்படும். உறங்கும் போது உள்ளங்கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உறங்கலாம். இதனால் உடலில் உள்ள அதிக வெப்பம் நீக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை சமநிலையில் பேணப்படும்.
காலிஃபிளவர் இதனை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு குறையும். முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடு தணியும்.
நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்டால் உடல்சூடு தணியும்.
முள்ளிக்கீரையை சிறிது துவரம் பருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.
மணத்தக்காளி கீரையை சிறுபருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை நீரில் கழுவி அதனுடன் மிளகு, பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து சிறிது நெய் விட்டு சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப் பிஞ்சினை பச்சையாக அப்படியே சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
ஆவாரம்பூவின் பெரிய இதழ்களை எடுத்து வெயிலில் காயவைத்து பின்னர் இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். காலை மாலை தேயிலைக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகித்துவந்தாலும் உடல் சூடு தணியும்.
Comments
Post a Comment