கண்ணீர் விட்டு அழுதால் கிடைக்கும் நன்மைகள்

கண்ணீர் விட்டு அழுதால் கிடைக்கும் நன்மைகள்

அழுகை எப்போதும் சோகமான தருணத்தில் ஏற்படுத்துகிறது. அழுகை வரும் போது அழுது விடுங்கள், அழுகையை அடக்க முயற்சி செய்ய வேண்டாம். அழுகை இன்பத்தை பலமடங்கு அதிகரிக்கும் மற்றும் சோகத்தை பலமடங்கு குறைக்கும்.



பிறக்கும் போது குழந்தை அழவில்லை என்றால் குழந்தை இறந்து இருக்கலாம் அல்லது பிறந்த பிறகு மரணிக்கலாம். நம் வாழ்க்கை அழுகையில் தொடங்கி அழுகையில் முடிகிறது. சோகமான வாழ்க்கை ஒரு வகையில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். அழுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது, அவைகள் பின்வருமாறு,

1. அசுத்தங்களை நீக்குகிறது:



சோகமான தருணத்தில் நாம் அழும் போது கண்ணீர் வெளியேறும், அவற்றில் உப்பு இருக்கும் என அனைவரும் அறிவோம், அவற்றில் உப்பு மட்டுமல்ல சில அசுத்தங்களும் ( தூசி, துரும்புகள் ) சேர்ந்தே வெளியேறும். வெங்காயம் உரிப்பதால் வரும் கண்ணீர் கூட நல்லதுதான். அழுகை வரும் போது அடக்காமல் அழுது விடுங்கள்.

2. கண் பார்வை மேம்படுகிறது:

கண்ணீர் விட்டு அழுகையில் தூசி வெளியேறும் மற்றும் கண்புரை ஏற்படாமல் தடுக்க முடியும். அழுகை கண்கள் வறட்சியடையாமல் காக்கிறது.

3. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது:



மன அழுத்தம், சோகம், வருத்தம் போன்ற அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. கண்ணீர் விட்டு அழுதால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் சுரகக்கிறது. அழுகை வாழ்க்கையில் முக்கியமான ஒன்று, தயவுசெய்து தவிர்க்க வேண்டாம்.

4. மூக்கடைப்பை குணப்படுத்துகிறது:



அழும் போது முகத்தில் உள்ள தசைகள் விரிவடைந்து மூக்கு துவாரத்தில் அடைத்து கொண்டு இருக்கும் சளி மற்றும் மற்ற திரவங்களை நீக்குகிறது.

5. சளி மற்றும் இருமல் குணப்படுத்துகிறது:



சளி மற்றும் இருமல் அதிகரிக்க காரணமாக உள்ள வேதி பொருட்கள் வெளியேற கண்ணீர் விட்டு அழுவது நல்லது. சளி எளிதில் வெளியேறவும் அழுகை உதவுகிறது.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த தகவல்கள் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி