ஆற்றல் திறனை அதிகரிகக் அதிகளவில் தண்ணீர் குடியுங்கள்
சென்னை: ஆற்றல் திறனை அதிகரிக்க அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். நீர்ச்சத்து இல்லாமல் போனாலும் கூட நீங்கள் சோர்வடைவீர்கள். நல்ல உடற்பயிற்சிக்கு பிறகு குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மனிதர்களாகிய நமக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று தான் ஆற்றல் திறன். ஆற்றல் திறனால் தான் நம்மால் நம்முடைய அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்காக செய்ய முடிகிறது. ஆற்றல் திறனை இழக்கையில் நாம் சோர்வடைந்து வலுவிழந்து போகிறோம். நாள் முடிவடையும் நேரத்தில் நாம் சோர்வாக உணர்வது வாடிக்கையான ஒன்று தான்.
களைப்பு ஏற்படுவதால் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் உடைந்து போவீர்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் பாதிக்கும். களைப்பின் அளவு அதிகரிக்கும் போது உடல் சுகவீனம், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உண்டாகும். நேர்மறை ஆற்றல் திறன் உங்கள் படைப்பாற்றலையும் ஆக்க வளத்தையும் மேம்படுத்தும்.
இந்த பிரச்சனைகள் அனைத்தையும் எதிர்த்து போராட ஒரே வழி, உங்கள் ஆற்றல் திறனை எப்படி அதிகரிப்பது என்பதை புரிந்து கொள்வதில் தான் அடங்கியுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் இதற்கான தேர்வு. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் ஓய்வை உங்கள் வாழ்க்கை முறை கொண்டிருக்க வேண்டும்.
இது உங்கள் உடலுக்கு போதிய ஆற்றல் திறனை அளிக்கும். அதனால் நாள் முழுவதும் சோர்வடையாமால் இருப்பீர்கள். நம் உடலில் மெக்னீசியத்தின் அளவு குறையத் தொடங்கினால், நம் ஆற்றல் திறன் குறைவதையும் நம்மால் உணர முடியும். உடலுக்கு போதிய அளவிலான மெக்னீசியத்தை அளிப்பதும் கூட நல்ல ஆரோக்கியத்திற்கான ஆற்றல் திறன் டிப்ஸாகும்.
ஆற்றல் திறனை அதிகரிக்க அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். நீர்ச்சத்து இல்லாமல் போனாலும் கூட நீங்கள் சோர்வடைவீர்கள். நல்ல உடற்பயிற்சிக்கு பிறகு குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Comments
Post a Comment