பழைய டூத் பிரஷ்-ஐ பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ் !
டைல்ஸ் இடுக்குகளில் உள்ள அழுக்கை நீக்க :
இரண்டு டைல்ஸ்கள் ஒன்று சேரும் இடத்தில் அழுக்குகள் கோடு போன்று தங்கிவிடும். மாப் போட்டுத் துடைத்தாலும் அழுக்குகள் போகாது. அதனால் டைல்ஸை சுத்தம் செய்யும் போது பிரஷால், இடுக்குகளில் தேய்த்து துடைத்தால் அழுக்கு நீங்கி தரை முழுவதும் சுத்தம் ஆகும்.
சீப்பை சுத்தமாக்குவதற்கு :
சீப்பை சுத்தம் செய்வதற்கு சூடான நீரில் சோப்பு தூளை கலந்து அதில் சீப்பை ஊற வைக்கவும். பின்பு சிறிது நேரம் கழித்து பிரஷால் சீப்புகளின் இடுக்கில் உள்ள அழுக்குகளை தேய்த்து எடுத்தால் சீப்பில் உள்ள அழுக்குகள் எளிதாக நீங்கிவிடும்.
கேஸ் அடுப்பு :
எண்ணெய் பசை படிந்த கேஸ் ஸ்டவ் பர்னர்கள், சிம்னி இவற்றை சுத்தம் செய்வதற்கு பிரஷை பயன்படுத்தலாம். சமையல் சோடா மற்றும் சோப்பு தூள் இரண்டையும் வெந்நீரில் கலந்து பிரஷால் தேய்த்து துடைத்தால் எண்ணெய் பசைகள் நீங்கிவிடும்.
காலணிகள் :
ஷூ, செருப்பு முதலான காலணிகளை சோப்பு நீரால் பிரஷை வைத்து தேய்த்து துடைத்தால் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். நன்கு சுத்தம் செய்த பிறகு ஷூ -க்கு பாலிஷ் போட்டால் ஷூக்கள் புதிது போல் இருக்கும்.
புருவம், மீசை மற்றும் நகங்களை சுத்தமாக்க :
புருவம் மற்றும் மீசைகளை தவறாமல் சுத்தமான பிரஷால் சரி செய்யும் போது புருவம், மீசை அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். நக இடுக்குகளில் இருக்கும் அழுக்கின் மூலமாக நோய்த்தொற்று ஏற்படலாம். அதனால் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
கதவு, ஜன்னல் இடுக்குகளில் உள்ள அழுக்கு நீங்க :
மேலும், கதவு மற்றும் ஜன்னல் இடுக்குகளில் ஒட்டடை மற்றும் அழுக்கு சேர்ந்திருக்கும். பூ வேலைப்பாடுகள் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளின் ஓரங்களில் இருக்கும் அழுக்கை சாதாரணமாக துடைக்க முடியாது. அதற்கு பிரஷ் மூலம் இடுக்குகளில் உள்ள அழுக்கை தேய்த்தால் அழுக்கு நீங்கிவிடும்.
Comments
Post a Comment