வராக அவதாரம்

வராக அவதாரம் விஷ்ணுவின்மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பியான்இரண்யாட்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம். 

வராக அவதாரம்

சடபாதபிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் மற்றும் இராமாயணம்போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றி கூறப்பட்டுள்ளது. 

வராகப் படிமம் என்பதை ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாக பிரித்துள்ளனர். இந்த பிரிவு அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. 

கோயில்களில்


ஏரான் எனும் இடத்தில் குப்தர்கள் காலத்து வராகப் படிமம் உள்ளது. இதுவே தற்போது இருக்கும் படிமங்களுல் தொன்மையானது.மாமல்லபுரத்தில் ஆதிவராக வடிவம் குடவரையாக செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருப்பது கிபி 7 மற்றும் கிபி8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.





காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்திருப்பரங்குன்றம் ஆகியவற்றில் குடவரையாக உள்ளது. இவை பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்.



Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்