நல்லவர்களைக் கடவுள் சோதிப்பார் என்பது உண்மையா ?







கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியாக கப்பலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கப்பலில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. 


கப்பலில் பணிபுரிபவர்கள் கப்பலில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாரை சரி செய்ய முயற்சி செய்தனர். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கப்பலில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாரை சரி செய்ய முடியவில்லை. இறுதியில் கப்பல் கடலில் மூழ்கியது. அதில் பயணித்தவர்கள் அனைவரும் மடிந்தனர்.


கப்பல் கேப்டன் மட்டும் உயிர்பிழைத்து, நீந்தியபடியே ஆளில்லாத தீவு ஒன்றிற்கு வந்தார். ஆளில்லாத தீவில் தனியாக என்ன செய்வது எனத்தெரியாத அவர், அந்தத் தீவில் கிடைத்த ஓலை, குச்சி எல்லாவற்றையும் சேகரித்து அவர் தங்குவதற்கு என ஒரு குடிசையை அமைத்துக் கொண்டார். பிறகு வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக, உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்று அந்தத் தீவு முழுவதும் உணவைத் தேடி சென்றார்.


உணவை தேடிச் சென்று திரும்பி வந்து பார்த்த அவருக்கு ஒரே அதிர்ச்சி. அவர் தங்குவதற்காக அமைத்திருந்த குடிசை தீப்பற்றி எரிந்து போயிருந்தது. அதைப் பார்த்த அவருக்குக் கண்களில் கண்ணீர் அருவி போல் கொட்டியது.


கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்? ஏன் என்னை யாரும் இல்லாத தீவில் கொண்டு வந்து சேர்த்தாய். இந்தத் தீவில் எனக்கு உண்ணக்கூட உணவு இல்லை. நான் தங்கியிருப்பதற்காக கட்டிய குடிசையையும் தீப்பற்றி எரிய வைத்துவிட்டாயே என்று உரக்கக் கத்தினார்.


அப்போது அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது. அதில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி தங்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டனர். அப்போது அவர் அந்தக் கப்பலில் இருந்தவர்களிடம், நான் இந்த தீவில் இருக்கிறேன் என்று எப்படி உங்களுக்குத் தெரிந்தது எனக் கேட்டார்.


அதற்கு அவர்கள் யாரும் இல்லாத தீவில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். உடனடியாக யாருக்கோ நம் உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து வந்தோம் என்றனர். அப்போது தான் தீவில் மாட்டித் தவித்த கேப்டன் மனதிற்குள் கடவுள் எது செய்தாலும் அது நல்லதுக்காகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்தார்.


நல்லவர்களுக்குத் துன்பங்கள் ஏற்படும்போது 'கடவுள் சோதிப்பார், ஆனால் அவர்களை கைவிடமாட்டார்"


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி