சிவனுக்கு மாவிளக்கு
அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது போல, நினைத்தது நிறைவேற சிவனுக்கும் மாவிளக்கு ஏற்றலாம். இதற்காக சனி பிரதோஷம் அல்லது மாத சிவராத்திரி நாளில் வீட்டில் விளக்கேற்றி, "நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என துவங்கும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை படிக்க வேண்டும். மாலையில் கோவிலுக்குச் சென்று நந்தீஸ்வரர், சுவாமியை மூன்று முறைவலம் வந்து வழிபட வேண்டும். பின், பச்சரிசி மாவு அகல் செய்து, அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
Comments
Post a Comment