தை பிறந்தால் ஒலி பிறக்கும்







தை பிறந்தால் பிரச்னைகளுக்கெல்லாம் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால், தை பிறந்ததும், வயல்களில் நெற்கதிர்கள் காற்றில் அசையும் ஒலி கேட்கக் காத்திருக்கிறார்கள் சீர்காழி அருகிலுள்ள திருநாங்கூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள். இவ்வூரைச் சுற்றி ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 11 திவ்யதேசங்கள் (பெருமாள் கோயில்கள்) உள்ளன. அவை திருக்காவளம்பாடி, அரிமேய விண்ணகரம், வண்புருஷோத்தமம், செம்பொன்செய்கோயில், மணிமாடக்கோயில், வைகுந்த விண்ணகரம், தேவனார்த்தொகை, தெற்றியம்பலம், திருமணிக்கூடம், வெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகியவை. தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணபெருமாள் சந்நிதியில், 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் திருமங்கைஆழ்வாருக்காக எழுந்தருள்வர். அப்போது ஆழ்வார், ஒவ்வொரு பெருமாள் மீதும் பாசுரம் பாடும் மங்களாசாசன வைபவம் நடக்கும். தை அமாவாசையன்று, திருநாங்கூர் வயல்வெளிகளில் நெற்பயிர் காற்றில் எழுப்பும் "சலசல' ஒலியைக் கேட்டு பக்தர்கள் திருமங்கையாழ்வாரே தங்கள் வயலில் எழுந்தருளி விட்டதாகவும், அந்த மகிழ்ச்சியில் கதிர்கள் அசைந்தாடி அவரை வரவேற்பதாகவும் பாவனை செய்து மகிழ்ச்சியடைவர். ஆழ்வாரின் பாதம் தங்கள் வயலில் பட்டால், விளைச்சல் அதிகரிக்குமென நம்புகின்றனர். 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்