இந்த யோகம் உடையவர்கள் நேர்மையானவர்களாம்
பாச யோகம் :
ராகு - கேதுவை தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஐந்து ராசியில் சஞ்சரித்தால் அது பாச யோகம் எனப்படுகிறது. இந்த யோகம் உடையவர்களின் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
பாச யோகம் உடையவர்கள் உண்மையை பேசக் கூடியவர்கள். தொழிலில் நேர்மையான எண்ணம் உடையவர்கள். சொத்துக்கள் வாங்குவதில் அதிக விருப்பம் கொண்டவர்.
தாமினி யோகம் :
ராகு - கேதுவை தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஆறு ராசியில் அமைவது தாமினி யோகம் எனப்படும். இந்த யோகத்தினால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்.
தாமினி யோகம் உஙள்ளவர்கள் கல்வி ஞானம் உடையவர்களாக இருப்பர். நற்பண்புகளைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். கருணை உள்ளம் கொண்டவர்கள்.
கேதார யோகம் :
ராகு - கேதுவை தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது நான்கு ராசியில் இருப்பது கேதார யோகம் எனப்படும். கேதார யோகத்தால் உண்டாகும் பலன்கள் என்னவென்று பார்ப்போம்.
இந்த யோகம் உள்ளவர்கள் விவசாயம், கால்நடைகள் மூலம் அதிக லாபம் அடைவார்கள். மனைகள் மூலம் பொருள் ஈட்டுவார்கள்.
தமிழக கோவில்களின் வரலாறுகளை ( தினந்தோறும் வெளியாகும் ) அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள்...
Comments
Post a Comment