ஆஞ்சநேயருக்கு காகித மாலை போடலாமா ?
ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொள்பவர்கள், "ராமஜெயம்' எழுதிய காகிதங்களை சுவாமிக்கு அணிவிக்கிறார்கள். இது அன்பின் காரணமாக செய்யப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு காகித மாலை போட வேண்டுமென சாஸ்திரத்தில் சொல்லவில்லை. அவருக்கு பிடித்தது துளசி மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து, ஸ்ரீராமஜெயம் நாமத்தை மனதாரச் சொல்லி, வணங்கினாலே போதும். மற்றவர்களுக்கு இடையூறு இன்றி அமர்ந்து 1008 முறை இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். வீட்டில் இருந்தபடியும் ஜபிக்கலாம்.
Comments
Post a Comment