Posts

Showing posts from January, 2018

கோவிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன ?

Image
ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர். ஆலயம் புருஷாகாரம் என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. மனித உடலைப் போன்றது கோயில் என்பது இதன் பொருள்.  கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம்.  ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.

சிவன் ஆலயத்தில் அமரலாம் - விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது ஏன் ?

Image
சிவன் ஆலயத்தில் அமரலாம். ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது ஏன்? என்று கூறுவார்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். * சிவன் ஆலயத்தில்தரிசனம் முடிந் து வெளியேவந்து கொடிமரத்திற்கு அருகில் நமஸ்காரம்செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வர வேண்டும்.அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை. * விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும்போது, மகாலட்சு மி நம் கூடவே வருவதாக சொல்வார்கள். அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விடவேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம்.

சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

Image
நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 31-ம் தேதி புதன்கிழமை (31-01-2018) சந்திர கிரகணம் மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும் இரவு 9.38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.  சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது. • பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும். • சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். • சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா

Image
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பாத யாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு பாத யாத்திரையாக வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக வருகின்றனர். தைப்பூச தினத்தன்று மாலை 5.16 மணியில் இருந்து இரவு 8.50 மணி வரையிலும் சந்திர கிரகணம் ஏற்படுவதால், பூஜை காலங்கள் மாற்றப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக

சந்திர கிரகணத்தால் எந்த நட்சத்திரகாரர்களுக்கு தோஷம் ?

Image
சந்திர கிரகணம் எப்போது தொடங்குகிறது, எந்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும், கிரகணம் தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டியவை என்னென்ன என்று தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் விரிவாக நமக்கு விளக்கியுள்ளார்.  சந்திர கிரகணம் என்பது மனக்காரகனான சந்திரன் நவக்கிரகங்களில் முதன்மையான சூரிய ஒளியில் இருந்து பூமியால் மறைக்கப்படுவதால் ஏற்படுவதாகும். சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பௌர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது 'ப்ளு மூன்" என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும். நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 18ம் நாளான புதன்கிழமை (31.01.2018) அன்று ஆயில்ய நட்சத்திரத்தில் ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் உண்டாகிறது. ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் என்பது ராகுவின் வசம் மனக்காரகனா

இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம்

Image
இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளில்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகின்றது. இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம்.  இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கி இருப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுழைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றா

முதல் நாள் ஞாயிறு ஆனது ஏன் ?

Image
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும்.  மனிதர் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையோடு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

Image
இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். அந்தவகையில், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி இப்போது பார்ப்போம். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரைக் காணலாம். பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி எனப் பல பெயர்களில் வணங்கப்படுகிறார். இக்கோயில் நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாணுமாலயன் என்ற இக்கோயிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலானது கேரளத்தைச் ச

சிவனுக்கு மாவிளக்கு

Image
அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது போல, நினைத்தது நிறைவேற சிவனுக்கும் மாவிளக்கு ஏற்றலாம். இதற்காக சனி பிரதோஷம் அல்லது மாத சிவராத்திரி நாளில் வீட்டில் விளக்கேற்றி, "நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என துவங்கும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை படிக்க வேண்டும். மாலையில் கோவிலுக்குச் சென்று நந்தீஸ்வரர், சுவாமியை மூன்று முறைவலம் வந்து வழிபட வேண்டும். பின், பச்சரிசி மாவு அகல் செய்து, அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

பலன் தரும் கிரகங்கள்

Image
ஒவ்வொரு கிரகமும் நமக்கு ஒவ்வொரு பலனைத் தருவதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சூரியன் - ஆரோக்கியம் சந்திரன் - மனோ தைரியம் செவ்வாய் - அதிகாரம், பதவி புதன் - புத்தி குரு - கல்வியறிவு சுக்கிரன் - செல்வ வளம் சனி - சம்பாத்தியம், தீர்க்காயுள்

ஆஞ்சநேயருக்கு காகித மாலை போடலாமா ?

Image
ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொள்பவர்கள், "ராமஜெயம்' எழுதிய காகிதங்களை சுவாமிக்கு அணிவிக்கிறார்கள். இது அன்பின் காரணமாக செய்யப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு காகித மாலை போட வேண்டுமென சாஸ்திரத்தில் சொல்லவில்லை. அவருக்கு பிடித்தது துளசி மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து, ஸ்ரீராமஜெயம் நாமத்தை மனதாரச் சொல்லி, வணங்கினாலே போதும். மற்றவர்களுக்கு இடையூறு இன்றி அமர்ந்து 1008 முறை இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். வீட்டில் இருந்தபடியும் ஜபிக்கலாம்.

மனத்துயரம் நீங்கி மன அமைதி பெற செல்ல வேண்டிய கோயில்

Image
தஞ்சை மாவட்டத்தில், திருவைகாவூரில் வில்வவனேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 48-வது சிவதலமாகும். மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகாசிவராத்திரி இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மூலவர் : வில்வவனேசுவரர் அம்மன் : வளைக்கை நாயகி தலபெருமை : தவநிதி என்ற முனிவர் திருவைகாவூர் ஆலயத்தில் தங்கி வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். ஆலயத்தைச் சுற்றி பெரும் காடாக இருந்தது. அந்தக் காட்டில் ஒரு வேடன் குடும்பம் வசித்து வந்தார்கள். அவன் உணவுக்காக வேட்டைக்கு சென்றபோது இருட்டும் நேரத்தில் ஒரு மானைக் கண்டான். அதைத் துரத்தினான். மான் பயந்து ஓடி ஆலயத்திற்குள் நுழைந்து அமர்ந்திருந்த தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது.  முனிவர் மானுக்கு அபயமளித்தார். அதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் இறைவனை வேண்ட இறைவன் புலி உருக்கொண்டு வேடனைத் துரத்த பயம் கொண்ட வேடன் ஆலய பிரகாரத்தில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் வேடன் இறங்கட்டும் என்று மரத்தடியிலேயே காத்திருந்தது. புலி போகட