நாம் மூளை முடிவை எடுக்க எத்தனை வினாடிகள் தெரியுமா?
நாம் மனதிற்குள் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பே, நமது ஆழ்மனதில் அந்த முடிவு எடுக்கப்பட்டுவிடுகிறது. இதை உளவியலாளர்கள் காலங்காலமாக சொல்லி வந்துள்ளனர். ஆனால், அண்மையில் தான் எதை முன்பாக ஆழ்மனதில் முடிவு எடுக்கப்படுகிறது என்பதை, மூளையியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மூளையின் இயக்கத்தை படம்பிடிக்கும். எப்.எம்.ஆர்.ஐ., இயந்திரத்தில் 14 பேரை படுக்க வைத்து இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு விடையாக அவர்கள் ஒரு பொத்தானை அழுத்தும்படி சொல்லப்பட்டது.
அப்போது மூளையில் முடிவு எடுக்கும் பகுதியில் ஏற்பட்ட மாறுதல்களையும், பொத்தானை அழுத்தும்போது ஏற்பட்ட மாறுதல்களையும், விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த இரு செயல்களுக்கும் உள்ள இடைவெளி, 11 வினாடிகள்.
எனவே ஒரு முடிவை நாம் உணர்வதற்கு 11 வினாடிகள் முன்பாகவே மூளையில் அந்த முடிவு எடுக்கப்பட்டு விடுகிறது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வின் முடிவு, &'சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்&' இதழில் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment