புதன் பகவான் மந்திரம்
மந்திரங்கள்
புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர், பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம்.
புதன் பகவான் நம் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர், பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம். புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயர் உண்டு .புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும்.
அமைதி கிடைக்கும் .
புதன் மந்திரம் :
ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்
புதன் காயத்ரி மந்திரம் :
ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்
இந்த பாடலை பாடி புதன் அருளை பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன். புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம்.
பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.
Comments
Post a Comment