பெண்களின் இளமை கண்களில் தெரியும் வாங்க பார்க்கலாம்
கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இனிமையானவள் எவ்வளவு நல்லவள் என்பதை சொல்லி விடலாம்
அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அதிகம்
கண்களை சரியான முறையில் கவனிக்காமல் விடும் போது கண்களைச் சுற்றி கோடுகளும் கருவளையங்களும் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் கோடுகளும் கருவளையங்களும் கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முன்பே கண்களுக்கு சோர்வையும் களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.
சத்துமிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் போதிய உடற்பயிற்சி மற்றும் மிதமான நிம்மதியான உறக்கம் இவைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண்பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.
கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும் இவ்வாறு ஐந்து ஆறு முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் தளர்வுறும் வரையில் மறுபடி மறுபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.
நெற்றி கன்னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறையையும் பாதுகாப்பினையும் தர வேண்டும்.
கண்களின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு ரெட்டியின் யு எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண்டாகும் பாதிப்பை நீக்கி சருமத்தின் மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது.
சருமத்தை வழுவழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொலாஜென்னிற்கு உண்டு இயற்கையில் கிடைக்கக் கூடிய இப்புரதமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலாஜன் ஊசி மூலம் சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வைத்து நிரப்பப்படுகிறது.
இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும் அடிக்கடி தேவைப்படுவதில்லை குறுகிய கால சிகிச்சையே நல்ல பலனைத் தருகிறது.
சூரிய ஒளியில் உள்ள ultra violet கதிர்களால் சருமம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகுதியான தாக்குதலுக்கு ஆளாகிறது. சர்மத்தின் வெளிப்புறம் சூரிய ஒளியினால் அதிகமாக பாதிக்கப்பட்டால் சில நேரங்களில் தோல் புற்றுநோய் கூட ஏற்படுத்துகிறது.
இந்த மாதிரியான பின்விளைவுகளை கருவளையம் போன்ற சீர்கேடுகளையும் தவிர்த்து விட நல்ல தரமான குளுமை கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம் மேலும் கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகாக்கக் கூடிய வகையில் குடை மற்றும் குல்லா போன்றவற்றை பயன்படுத்தலாம்.
கண்களுக்குக் கீழே உள்ள பகுதி மிக மிருதுவாகவும் லேசாகவும் இருப்பதால் வெகு விரைவில் அழற்சிக்கு ஆட்பட்டு விடுகின்றது. சத்தற்ற உணவு வேலைப்பளு மற்றும் மன இறுக்கம் போன்றவை இந்த விதமான அலர்ஜியை மேலும் தீவிரமாக்குகிறது. சில பெண்களுக்கு மரபியல் தன்மை காரணமாகவும் இந்நிலை ஏற்படச் வாய்ப்புள்ளது வயதாகும் பொழுது இத்தகைய தொங்கு தசைகள் முகத்தில் பெருங் குறையை உண்டாக்கி தோற்றத்தையே சிதைத்து விடுகிறது.
இவ்வாறாக ஏற்படும் கொழுப்பு சதையை பிலிப் பிரோம் பிளாஸ்டி எனப்படும் கண் அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி வெளியே எடுத்து சரி செய்து விடலாம். ப்ரோ லிஃப்ட் என்னும் முறைப்படி ஒழுங்கற்று இருக்கும் புருவங்களை அழகாக தீட்டி கண்களை இளமையோடும் புதுப்பொலிவுடனும் இருக்கச் செய்யலாம்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வரும் மருத்துவர்களின் உதவியால் இக்குறைபாட்டை அகற்றிவிடலாம்.
Comments
Post a Comment