ஏசியினை தொடந்து பயன்படுத்தினால் உண்டாகும் விளைவுகள்
Pozhichai sundar
எந்த நேரமும் ஏசி அறையில் இருப்பவர்களுக்கு இயற்கையான சூரிய ஒளி கிடைப்பதில்லை இதனால் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் D உடலுக்கு கிடைக்காமல் போகிறது. ஏசி அறையில் தொடர்ச்சியாக இருப்பவர்களுக்கு சரும பிரச்சனைகள் உண்டாகின்றன, சருமத்தின் ஈரபதத்தினை ஏசி உறிஞ்சி விடுகிறது. இதன் காரணமாக சருமம் வரண்டு காணப்படும்.
எக்சிமா,சொரியாசிஸ் போன்ற நோய் உள்ளவர்கள் தொடந்து ஏசி அறையில் இருக்கும் போது நோயின் தாக்கம் அதிகமாகிறது.
சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் D இதயம்,நுரையீரல் சீீீீராக இயங்குவதற்க்கு முக்கியமான ஓன்றாகும். ஏசி அறையில் தொடர்ச்சியாக இருப்பவர்களுக்கு இது கிடைக்காமல் போவதால் எலும்புகள் பலவீீனமடையும். முதுகு வலி, மூட்டு வலிகள் எளிதில் வந்துவிடும்.
ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகள் வரும். தலைமுடி வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படும். ஏசி யினை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்பட்டு சருமம் பாதிப்படையும். அம்மை நோய் மற்றும் மெட்ராஸ்ஐ போன்ற நோய் உள்ளவர்கள் ஏசி அறையில் அமர்ந்தால் அவர்களிடம் இருந்து நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும்.
Comments
Post a Comment