வாழைப்பழத்தை ஏன் தெய்வங்களுக்கு படைக்கிறார்கள்? இதற்குள் இவ்வளவு காரணம் இருக்கு – தெரிந்து கொள்ளுங்கள்.!




☆ பழங்களிலேயே தவறாமல் வாழைப்பழத்தை தான் எல்லா தெய்வங்களுக்கும் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்து விடுகின்றோம் அந்தக் கொட்டையில் இருந்து மீண்டும் ஒரு செடி முளைக்கும்.

☆ ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.

☆ நாம் கடவுளிடம், கடவுளே! எனக்கு மீண்டும் பிறவியே இருக்கக்கூடாது என்பதை வேண்டுவதற்காகவே பிறவி இல்லாத வாழைப்பழத்தை நாம் இறைவனுக்கு படைக்கிறோம்.

☆ அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.

☆ முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.

☆ மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், நமது எச்சில்படாத தேங்காய், வாழைப்பழம் இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

பஞ்சாங்கம் என்றால் என்ன ?