ஏசியை புல் கூலிங்கில் வைத்து முகத்திற்கு கழுத்திற்கு என்று விதவிதமாக காற்று வாங்கும் நபர்களே., கவனம் தேவை.!!
இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் குளிர்பதனப்படுத்தப்பட்டுள்ள அறைகளில் தங்களின் பணிகளையும்., வீடுகளில் அறை குளிரூட்டியை பொறுத்தியும் குளுமையான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அதிக நேரம் ஏசி பயன்பாட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து இனி காண்போம்.
குளிரூட்டியின் பயன்பாடு மூலமாக நமது சருமத்திற்கு அதிகளவு தீங்கானது விளைகிறது. நமது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட்டு., சருமம் தனது வறட்சியை அடைகிறது. இதுமட்டுமல்லாது உதடுகளும் விரைவில் தனது வறட்சியை அடைந்து உலர்கிறது.
அதிக நேரம் ஏசியில் அமர்ந்து இருக்கும் காரணத்தால் நமது உடலுக்கு தேவையான சூரிய ஒளியானது கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாக நமது உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.
ஏசியில் பணியாற்றும் சிலர் ஏசிக்கு நேரடியாக அமர்ந்து பணியாற்றி வருவது வழக்கம் அல்லது அவர்களுக்கு எதிராக ஏசியின் அமைப்பு அமையபெற்று இருக்கலாம். இதனால் சைனஸ் தூண்டப்பட்டு., மூக்கடைப்பு., தலைவலி மற்றும் குளிரால் காது அடைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும்., சருமம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
நமது உடலில் இருக்கும் வைட்டமின்னானது இதயம்., நுரையீரல் மற்றும் கருத்தரித்தல் போன்ற விஷயங்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். வைட்டமின்கள் கிடைக்காமல் போகும் பட்சத்தில் எலும்புகள் தனது பலத்தை இழந்து., மூட்டு வலி மற்றும் முதுகு வலி பிரச்சனையானது ஏற்படும்.
இதுமட்டுமல்லாது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படவும்., தலைவலி மற்றும் நுரையீரல் தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. நீரழிவு நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் சரும வறட்சி பிரச்சனை., தலை முடி உதிரும் பிரச்சனை போன்றவற்றால் அவதியுற நேரிடும்.
Comments
Post a Comment