வளர்ச்சிக்கான வழிமுறை எது
* அதிகாலையில் (காலை 6:00 மணிக்கு முன்) எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள். இதுவே வளர்ச்சிக்கான வழிமுறை.
* குடும்பத்தை பேணுதல், தர்மநெறி தவறாமல் வாழ்தல், உயிர்களை நேசித்தல் இவையே நல்ல பெண்ணுக்கு அழகு.
* பலமுறை சுட்டிக்காட்டிய பிறகு செயலில் ஈடுபடுவது பண்பாகாது. தானாகவே கடமையைச் செய்ய முன் வரவேண்டும்.
* பெரியோர் இருக்குமிடத்தில் பேசுபவன் தனது வாதங்களை முகத்தில் அடித்தாற் போல நிதானமின்றி கூறக்கூடாது.
* இனிமை தரும் நல்ல மொழிகளைப் பேசு. கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்.
* நல்ல நுால்களைப் படித்தால் அறியாமை அகலும். ஆராய்ந்து முடிவு செய்து, பிறகு செயலில் இறங்கு.
* தர்மநெறியை வாழ்வில் எப்போதும் மறவாதே. எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்று.
* நல்ல செயல்களை நீயே முன்னின்று செய். எந்த செயலையும் அதற்குரிய காலத்தில் செய்.
* பசியை விடக் கொடிய நோய்வேறில்லை. அளவுக்கு அதிகமாக உண்ணாதே.
- அவ்வையார்
Comments
Post a Comment