எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசணும்?


இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசிக்கொள்வது எவ்வளவோ குறைந்து போய்விட்டது. ஆண்ட்ராய்ட் இருக்கிறது, அதில் வாட்ஸப் இருக்கிறது, மெசெஞ்சர் இருக்கிறது. எல்லாம் இருந்தாலும் கூட, அவற்றில் எல்லாம் பேசினாலும் கூட சில நேரங்களில் சில நபர்களுடனான நட்புறவு பிடிபடுவதில்லை. அவருக்கும் நமக்கும் ராசி இல்லையோ என தலைக்கு மேல் கிளை விரிக்கும். அது உண்மைதான். பேசுவதற்கும் ராசிக்கும் சம்மந்தம் உண்டு என ஆரூடர்கள் கூறுகின்றனர். ஒவ்வொருவரின் ராசிக்கேற்ப அவர்களிடம் பேசினால் நாம் எண்ணிச்சென்ற காரியம் முடியும் என்பதை இங்கே நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே.











மேஷம்: பேச்சுப்புயல், சொல்லிலே போர் வாளாக இருக்கும் இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும். இடம் கொடுத்தார் என்பதற்காக ஓவராக போய் வாக்குவாதம் செய்யக்கூடாது.











ரிஷபம்: பார்த்தால் வம்பில் கோர்த்துவிடும் ஆளைப் போலத் தெரிந்தாலும் சரியான வெள்ளந்திகள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்களிடம் கனிவாகவும், பக்குவமாகவும், பொறுமையாகவும் பேச வேண்டும்.











மிதுனம்: உங்களுடன் பழகுவதற்கு முன்பு உங்களைப் பற்றி ஒரு பெரிய ரிஸர்ச்சையே செய்தபிறகுதான் பழகுவார்கள். இவர்களிடமெல்லாம் அளவாக பேசுவதே நன்று.











கடகம்: ஆள் நல்லா வாட்டசாட்டமாக இருந்தாலும், இவர்களின் குரல் சத்தம் ஒரு அடிக்கு மேல் வெளியில் போகாது. அப்பிராணிக்கு அப்பிராணியான இவர்களிடம் பாசத்துடன் பேச வேண்டும். எல்லா உதவிகளும் கிடைக்கும்.











சிம்மம்: ராசிக்கேற்ப மிக தைரியமான ஆளாக இருக்கும் இவர்களிடம், பொறுமையாக பேச வேண்டும். சொல்ல வேண்டியதை சரியா, ஷார்ட்டா சொல்லி முடிக்க வேண்டும். இல்லையெனில் வேட்டையாடிவிடுவார்கள்.











கன்னி: இந்த ராசிக்காரர்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்கள். இவர்களுடன் இருக்கும் வரை, பேசி பேசியே எல்லா காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம்.











துலாம்: நீங்கள் பேசப் போகும்போதே, உங்களுக்கு என்ன வேண்டம் என்பதை எடை போட்டுவிடுவார்கள் கன்னி ராசிக்காரர்கள். நல்ல விஷயங்களுக்காக இவர்களிடம் செல்லலாம்.






விருச்சிகம்: நீங்கள் இவர்களிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நீங்கள் என்ன பேசினாலும் இவர்கள் நம்பி விடுவார்கள். கேலி செய்தாலும், தர லெவலுக்கு ஓட்டினாலும், அதை துடைத்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.











தனுசு: அன்பா பண்பா பேசினால் உங்கள் காரியம் இவர்களிடம் கைகூடிவிடும். பாசமாகவும், வார்த்தைகளை நிதானமாகவும் பேச வேண்டும்.











மகரம்: கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்… என்பது போலத்தான் இருக்கும். நீங்கள் ஒன்றை பேசப் போய், அவர்கள் ஒன்றை பேசிக்கொண்டிருப்பார்கள்.











கும்பம்: இவர்களிடம் உங்களால் பேசவே முடியாது. நீங்கள் இவர்களின் கண்களில் பட்டாலே, உங்களிடம் சுயபுராணத்தை அவிழ்த்து, கச்சேரி நடத்துவார்கள். காதுகள் ஜாக்கிரதை.











மீனம்: ஆள் இந்தியா ரேடியோவின் நடமாடும் பிரேஞ்ச் இவர்களாகத்தான் இருப்பார்ககள். வாணி ராணி சீரியலில் நடக்கும் சண்டையில் இருந்து, பக்கத்து வீட்டு சண்டை வரையும் அப்டேட்டடா இருப்பார்கள். உங்கள் வீட்டில் கடையாக எப்போது சண்டை நடந்ததென்று இவர்களிடமே கூட கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி