பேன் தொல்லைக்கு ஒரே நிரந்தர தீர்வு இதுதான்!
சர்வதேச அளவில் பெண்களின் தலைக்கு மேல் இருக்கும் முக்கிய பிரச்சினை பேன் தொல்லைதான். கூந்தலின் அழகை கெடுப்பதிலும், தலையில் கடித்து உயிரை வாங்குவதிலும் பேன்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஷாம்பு, எண்ணெய்கள், ஆயுர்வேதம் என இணையத்தில் உலவிய டிப்ஸ், பக்கத்து வீட்டம்மா சொன்ன டிப்ஸ், வீட்டில் அம்மா சொன்ன டிப்ஸ், சொந்தக்காரப் பெண்கள் சொன்ன டிப்ஸ், தொலைக்காட்சியில் வரும் பெண்களுக்கான நிகழ்சிகளில் பிரபலங்கள் சொன்ன டிப்ஸ் என ஒரு குயர் நோட்டு முழுவதும் டிப்ஸாக எழுதி வைத்து, அதை வொர்க்-அவுட் செய்தாலும் பேன் தொல்லை உங்களை விடுவதில்லை. ஹேர் கேருக்குச் சென்றால் உங்கள் தலையில் பேன் எடுத்துக்கொண்டே, உங்கள் பர்சிலும் காசை உருவிவிடுவார்கள். ஆனால் பாருங்கள், அவர்கள் செய்யும் சிகிச்சையை நாமே வீட்டிலேயே செய்து விடலாம். என்ன அந்த சிகிச்சை? எப்படி செய்வது? என்று கேட்கிறீர்களா?
தேவையான பொருட்கள்:
பேன் சீப்பு
வெள்ளை வினிகர் (White Viniger)
மவுத் வாஷ் (Mouthwash)
பிளாஸ்டிக் பேக் (Shower Cap)
முதலில் தலை முடியை மவுத் வாஷ் கொண்டு கழுவுங்கள்.
பிறகு தலைமுடியை சுரட்டி, தலையை பிளாடிக் பேக் கொண்டு இறுக்கமாக மூட வேண்டும்.
1 மணி நேரத்திற்கு பிளாஸ்டிக் பையை அகற்றக்கூடாது.
பிறகு தலை முடியை ஒயிட் வினிகரைக் கொண்டு கழுவவேண்டும்.
மீண்டும் 1 மணி நேரத்திற்கு தலையை பிளாஸ்டிக் பை கொண்டு மூடவேண்டும்.
பிறகு நார்மல் ஷேம்ப் போட்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.
பின்னர் கூந்தலை காயவைத்து, பேன் சீப்பைக் கொண்டு சீவும்போது, இறந்துப்போன பேன்கள் சீப்போடு வந்துவிடும்.
வினிகரானது ஸ்கால்ப்புகளுக்குள் இருக்கும் பேனின் முட்டைகளை அகற்றிவிடும்.
மவுத்வாஷில் உள்ள லிஸ்டரின் வாடை பேனிற்கு ஒவ்வாது. இதனால் பேன் இறந்துவிடும்.
வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தால், ஜென்மத்திற்கும் உங்கள் தலையை பேன் நாடாது. வெளியில் செல்லும்போது ஸ்கால்ப்பின் மீது சிறிதளவு மவுத்வாஷ் ஸ்ப்ரே செய்துகொண்டு போவதால், மற்றவர்களின் தலையிலிருந்து உங்கள் தலைக்கு பேன் படையெடுக்காது.
Comments
Post a Comment