Popular posts from this blog
ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்
கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி? மிளகாய், உப்பு, சிறிது தெருமண் இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு ஊருகண்ணு, உறவுகண்ணு, நாய்கண்ணு, நரிக்கண்ணு, நோய்கண்ணு, நொள்ளகண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக்கண்ணு, அந்தகண்ணு, இந்தகண்ணு எல்லாம் கண்ணும் பட்டுப் போக... கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள். இது ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே! திருஷ்டியை கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. ஆனால் திருஷ்டி கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். மேலும் கிழக்குத்திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும். கழிக்கும் வகைகள் : கற்பூரத்தை ஏற்றி வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். இவ்வாறு போடும்போது கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரைந்துவிடுமாம். பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு ...
Comments
Post a Comment