காலையில் எழும்போது எந்த திசையை நோக்கி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
நம் முன்னோர்கள் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று சொல்லி வந்திருப்பார்கள். மேற்கே தலை வைத்து கிழக்கு நோக்கி படுத்து உறங்குவதே சிறப்பு என சொல்வார்கள். அதேபோல காலையில் துயில் எழும்போது எந்த திசையை பார்த்தவாறு எழுந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
கிழக்கு:
கிழக்கு திசை நோக்கி பார்த்து எழும்போது ஆயுள் விருத்தி அடையுமாம். காலையில் எழும்போது கண்களை மூடியவாறே எழுந்து கிழக்கு திசையை நோக்கலாம்.
மேற்கு:
ஒருவர் மேற்கு திசையை நோக்கி எழும்போது வாழ்வில் அதிகப்படியான நல்ல விஷயங்கள், சுப நிகழ்வுகள் நிகழும்.
வடமேற்கு:
ஒருவர் தினமும் காலையில் வடமேற்கு திசையை நோக்கி எழும்போது உடல்வாகு, ஆன்ம பலம் கூடும்.
வடகிழக்கு:
தினமும் காலையில் எழும்போது வடகிழக்கு மூலையை பார்த்தவறே எழும்போது சிந்தனை தெளிவாகும். உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
தென்கிழக்கு
ஒருவர் தினமும் காலையில் எழும்போது தென்கிழக்கு திசையை பார்த்தால் அவருக்கு எதிராக பகைமை, வெறுப்புணர்வுகள் உண்டாகலாம்.
தெற்கு:
ஒருவர் தினமும் காலையில் தெற்கு திசையை நோக்கி எழும்போது அவருக்குள் தேவையற்ற பயம், மரண பயம் உள்ளிட்ட பீதிகள் எழலாம்.
தென்மேற்கு:
தினமும் தென்மேற்கு திசையை நோக்கியவாறு எழும்போது அதிகப்படியான பாவங்களை செய்யும் மனநிலை ஏற்படும்.
Comments
Post a Comment