நிலவேம்பு கசாயம் எப்படி செய்யலாம்? சில யோசனைகள்!!


டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நிலவேம்பு கசாயத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கேரளா, மகராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் டெங்கு ஒலிப்பில் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. முக்கியமாக கொசுக்களை ஒழிக்கும் பணிகளிலும் மும்மரமாகவும், கவனத்துடனும் செயலாற்றி வருகின்றன.





முதல்முறையாக தமிழகத்தில் சுகாதார மையங்களில் நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.











நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற்படாகம், கோரைக்கிழங்கு ஆகியவற்றை பொடித்து உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு மூலிகையே நிலவேம்பு பொடியாகும். இது நாட்டுமருந்து கடைகளில் தனித்தனி மூளிகைகலாகவும், ஒருங்கிணைந்த பொடியாகவும் கூட கிடைக்கிறது. இதை எப்படி கசாயமாக காய்ச்ச வேண்டும் என இங்கு பார்ப்போம்.





5 கிராம் முதல் 10 கிராம் வரையிலான நிலவேம்பு பொடியை 200 மில்லி லிட்டர் தண்ணீருடன் கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். 200 மில்லி ஆனது 50 மில்லியாக குறையும் வரை அடுப்பிலிருந்து இறக்கக் கூடாது.





நன்கு சுண்டினால் மட்டுமே அந்த பொடியில் உள்ள வேதிப்பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் சரிவிகிதமாக கரைந்து, காய்ச்சல் மற்றும் நோய்களை விரட்டியடிக்கும்.





பின்னர், கசாயத்தை நன்கு வடிகட்டி பருக வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் நாளொன்றுக்கு காலை-மாலை என இரண்டு வேளை பருக வேண்டும்.





பலன்கள்:





டெங்கு போன்ற காய்ச்சல்களை விரட்டியடிப்பதுடன் மட்டுமின்றி, தலையில் நீர்கட்டு, தலைவலி, தும்மல், இருமல், மூக்கடைப்பு, தொண்டைவலி உள்ளிட்டவைகளையும் நிலவேம்பு கசாயம் தீர்த்து வைக்கும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு, கர்ப்பப்பை கட்டிகளுக்கு இந்த கசாயம் சிறந்த தீர்வினை கொடுக்கும். உடலுக்குள் இரத்த தட்டனுக்களையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலிமை பெறச் செய்யும் சக்தி நிலவேம்பிற்கு உண்டு. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல் நின்றபிறகு கசாயம் குடிப்பதை நிறுத்திட வேண்டும். அல்லது அதன் பின் குடித்தாலும் தவறில்லை.





அறிவுரை:





சர்க்கரை நோயாளிகள் இந்த கசாயத்தை பருகினால், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என வதந்தி உலவுகிறது. உண்மையில் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் அளிக்கிறது, இதனால் எவ்வித பாதிப்போ அல்லது பக்கவிளைவோ ஏற்படாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி