இரத்தத்தை அதிகரிக்க செய்யும் மகத்தான பழம்!
நாவல் பழத்தை கொண்டு இங்கு புராண கதைகளும் நடந்தேறியது. ஒளவையார் களைப்பாக ஒரு மண்டபத்தில் அமர, அங்கு மாறு வேடத்தில் முருகன் தோன்றி, “பாட்டி களைப்பாக இருக்கிறதா? நாவற்பழம் வேண்டுமா? சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் என்று கேட்டதாக இதிகசங்ககளும் இங்கு உண்டு. பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளது இந்த நாவல் பழம். பழம் மட்டுமல்ல நாவல் மரம் முழுவதும் மருத்துவ குணங்கள் கொண்டதாக திகழ்கிறது.
பசியின்மையை போக்கும்
நாவல் பழத்தில் தாதுச் சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. இதில் உள்ள இரும்பு சத்து உடல் வலிமை தருவதாக உள்ளது. செரிமான உணர்வை தூண்டி பசியை அதிகரிக்க செய்கிறது.
தாகத்தை போக்ககூடியது
நாவல் பழத்தில் உப்புடன் சேர்த்து சாப்பிட்டால் தொண்டைகளில் ஏற்படும் புண்கள் எளிதில் குணமாகும். இப்படியாக இன்னும் பல பிரச்சனைகளுக்கு அரு மருந்தாக உள்ளது நாவல். தாகம் ஏற்படும் போது நாவல் பழத்தை சாப்பிட்டால் தாகம் தீர்ந்துவிடும். பழுக்காத காய்களை உலர்த்தி பொடிசெய்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகிவிடும்.
களைப்பு நீங்க
நாவல் மரபட்டையை நீரில் கொதிக்க வைத்து பருகி வர உடல் களைப்பு நீங்கி உற்சாகம் பெருக்கெடுக்கும். இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகள் தீரும். மேல் காயங்களில் பட்டையை பொடியாக்கி பயன்படுத்தினால் விரைவில் காயங்கள் குணமாகும்.
இரத்தத்தை அதிகரிக்க
நாவல் பழத்தை சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. சர்க்கரை வியாதிக்கு மிக சிறந்த மருந்தாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சத்தியகவும் நாவல் பழம் உள்ளது
Comments
Post a Comment