சாத்விகம், ராட்சதம், தாமசம்… இதில் உங்களுடைய குணம் என்ன?


சாத்விகம், ராட்சதம், தாமசம் இந்த மூன்றும் முக்குணங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் இந்த மூன்று குணங்களின் அடிப்படையில் வெவ்வேறு விதமான பலன்களை கொண்டிருப்பார். இந்த மூன்று குனங்களுக்கான தன்மைகள், குணவான்களுக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவல்களை படித்துப் பாருங்கள்.





சாத்விகம்:





சாத்விக குணத்தை கொண்டவர்களின் மனம் நற்காரியங்களை செய்வதில் நாடியிருக்கும். மன அடக்கம், புலன் அடக்கம், நாவடக்கம் என சகல விதமான அடக்கத்துடனும் இருப்பர். ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்ற கொள்கையை கடைபிடிப்பர். துன்பங்களை பொறுத்து அதை வெல்வதால், இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களாக இருப்பர். விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பணிவு மற்றும் எளிமை போன்ற பண்புகளை கொண்டிருப்பர். குறிப்பாக இவர்களுக்கு கடவுள் பக்தி மிகுதியாகவே இருக்கும்.





ராட்சதம்:





சுய ஊக்கம், ஞானம், வீரம், தான தர்மம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர் போன்ற இயல்புகளை கொண்டிருப்பவர்கள் ராட்சத குணவான்கள். தற்புகழ்ச்சிக்கு ஆசை உள்ளவராகவும், கலவியில் நாட்டம் உள்ளவராகவும் இருப்பர். மற்றவர்களை கேலி செய்வது, அடங்காத பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்வது போன்ற இயல்புகள் இவர்களிடம் மிகுந்திருக்கும்.





தாமசம்:





தாமச குணவான்கள் காமம், வெகுளி, கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், யாசித்தல், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, அச்சம், வெளிவேசம் போன்ற இயல்புகளை கொண்டிருப்பர். தன்னைத்தானே உயர்த்திக்கொள்வதும், பகட்டு வாழ்க்கையை வாழ விரும்புவதும் இவர்களது முக்கிய ஆசையாக இருக்கும்.




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்