மனிதர்களுக்கு 3 கண்கள் இருக்கிறது… எப்படி கண்டுபிடிப்பது?


வெறுங்கண்ணால் சூரிய ஒளியை பார்த்துவிட்டு கண்களை மூடினால் சிவப்பு நிறமாக தோன்றுவதை நாம் பார்த்திருப்போம். கண்ணை மூடிக்கொண்டு பார்த்திருப்போம். ஆம், நமது இரண்டு கண்களுக்கு அப்பால் நெற்றியின் மீதுள்ள மூன்றாம் கண்தான் இந்த நிறத்தை கண்டு உணர்த்தி நம் மூளைக்கு தகவல் கடத்துகிறது. நெற்றி முழுவதும் தோலால் மூடப்பட்டுள்ளபோது எப்படி நெற்றிக்கண் செயல்படுகிறது? அது எங்கே இருக்கிறது? என அறிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வம் மிகுதியாகவே இருக்கும்.



7 சக்கரங்கள்

7 சக்கரங்கள்





பொதுவாகவே மனித உடலில் 7 சக்கரங்கள் இயங்குகின்றன. அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை மற்றும் சகஸ்ரகாரம். இதில் ஆக்ஞை எனப்படும் ஞான சக்கரம் அமைந்துள்ள இடம்தான் நெற்றிக்கண். இந்த சக்கரத்தை சர்வசாதரணமாக யாராலும் இயக்க முடியாது. கடுமையான தியானம், தவம் மேற்கொள்ள வேண்டும். மனித உயிர்சக்தியை மூலாதாரத்தில் இருந்து தூண்டி எழுப்பி, இறுதியாக சகஸ்ரகாரம் வரை கொண்டு வருபவர்களே சித்தர்கள் அல்லது ஞானிகள் என அழைக்கப்படுவர். இந்த ஆக்ஞை சக்கரத்தை இயக்குபவர்கள் சமூக வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள். ஞானம், தெளிவு போன்றவற்றை தூண்டும் சக்கரம் என்பதால் உங்களுக்கு அதீத ஆற்றல் கிடைக்கும். இந்த சக்தியை பெற்றவர்கள் உயர்ந்த முனிகளாக, ஞானவான்களாக வலம் வருவர்.



மூன்றாம் கண்

எப்படி உணர்வது?





முதலில் உங்களது நெற்றிக்கண் அதாவது மூன்றாம் கண் எங்கே அமைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சிறு பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்.





கண்களை மூடிக்கொண்டு சூரியனை நோக்கிப் பாருங்கள். கண்களின் இமைகளுக்கு செஞ்சிவப்பு நிறம் தோன்றும்.





கண்களை மூடியவாறே தலையை மட்டும் சூரிய ஒளி படாத பக்கம் திருப்புங்கள்.





இப்போதும் அந்த செஞ்சிவப்பு நிறம் நீங்காது; அதையே பார்த்துக்கொண்டிருங்கள்.





சிறிது நேரம் அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தால், நிறமத்தின் நடுவில் வெள்ளை நிற புள்ளி ஒன்றும் தோன்றும்.





அந்த வெண்ணிற புள்ளியை அப்படியே சில நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.





அப்படியே மெதுவாக கண் பார்வையை உயர்த்தி அந்த வெண் புள்ளியை உங்களது புருவங்களுக்கு மத்தியில் கொண்டு வர வேண்டும்.





இப்போது உங்களது புருவங்களுக்கு மத்தியில் ஒருவித அழுத்தம் ஏற்படுவதை உணர்வீர்கள்.





அந்த இடம்தான் மூன்றாவது கண் அமைந்திருக்கும் இடம்.
[மேற்கண்ட வழிமுறைகளை எல்லாம் கண் இமைகளை மூடிக்கொண்டே உள் பார்வையால் மட்டுமே பின்பற்றி செய்ய வேண்டும்]





இதுவும் ஒரு விதமான தியானம் மேற்கொள்ளும் முறைதான்.





மூன்றாம் கண் என்பது சித்த நிலையை அல்லது ஞானத்தை அடைவதற்கான பயிற்சியே. இப்பயிற்சியை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும். இருப்பினும் நெற்றிக்கண் திறப்பில் சிறப்பு பயிற்சிகளையும், வல்லமையையும் பெற்ற சித்த மருத்துவர்கள் அல்லது தியான பீடங்கள் மூலமாக மேற்கொண்டால் உங்களுக்கு இன்னும் விசேட பலன்கள் கிடைக்கும்.







Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி