நடராஜரின் கையிலுள்ள அக்னி எதனை உணர்த்துகின்றது

நடராஜரின் கையிலுள்ள அக்னி, ஞானத்தின் குறியீடாகும். ஞானத்தீ யார் மனதில் எரிகிறதோ அவருக்கே கடவுள் தரிசனம் கிடைக்கும் என்பதை அவர் ஏந்தியுள்ள தீச்சட்டி உணர்த்துகிறது.

இறைவன் செய்யும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில் நெருப்பானது அழித்தலைக் குறிக்கும். மனதில் இருக்கும் ‘அறியாமை’ என்னும் காட்டை நடராஜர் அழிக்கிறார் என்பதை அவர் ஏந்தியுள்ள நெருப்பு உணர்த்துகின்றது.

கையில் கற்பூரம் வைத்துக் கொண்டு ஒருவன் ஒன்றைச் சொன்னால், ‘சொல்வது சத்தியம்’ என்பர். நடராஜரும் எமக்கு சத்தியம் செய்து கொடுப்பது போன்றதையே அவருடைய தீச்சட்டி உணர்த்துகின்றது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்