திருக்குறளை பற்றி நீங்கள் அறியாத அரிய தகவல்கள்!
பதினெண் கீழ்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் முப்பால், உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறளும் திகழ்கிறது. அறம், பொருள், இன்பம் என முப்பால்களாகிய இவை மூன்றும் இயல் எண்ணும் பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரங்களைக் கொண்டதாகும். ஒவொரு அதிகாரமும் பத்து பாடல்கள் வீதம் 133 அதிகாரங்களுக்கு மொத்தம் 1330 குரல்களை தன்னுள் அடக்கியிருக்கிறது. இப்பாடல்கள் அனைத்தும் தொன்மையான குறள் வெண்பா வகையை சேர்ந்தவை ஆகும். இங்கே இந்நூலினுடைய மற்ற சிறப்புக்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
திருக்குறள் முதல்முதலாக புத்தகமாக அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
திருக்குறளின் இயற்பெயர் முப்பால் ஆகும்.
இந்நூல் ‘அ’கரத்தில் தொடங்கி ‘கை’ரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194
தமிழ் எழுத்துக்கள் 247ல் 37 எழுத்துக்கள் மட்டும் திருக்குறள் நூலில் இடம்பெறவில்லை.
திருக்குறளில் அனிச்சம் மற்றும் குவளை என இருமலர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பலம் நெருஞ்சி
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ‘ஔ’
திருக்குறளும் குறிப்பறிதல் பற்றி சொல்லபட்டுள்ளது.
திருக்குறளில் பனை மற்றும் மூங்கில் என 2 மரங்கள் இடம்பெற்றுள்ளன.
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து ‘னி’; மொத்தம் 1705 ‘னி’க்கள் உள்ளன.
திருக்குறளில் ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்து ‘ங’
திருக்குறளில் இடம்பெறாத இரண்டு சொற்கள் தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதல்முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்
திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யூ. போப்
திருக்குறள் உரையாசிரியர்களுள் 10வது உரையாசிரியர்தான் பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் 9
திருக்குறள் இதுவரை 27 மொழிகளில் வெளியாகியுள்ளது
இதுவரை திருக்குறளை 41 பேர் மொழி பெயர்த்துள்ளனர்
திருக்குறளானது நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment