இந்தியாவில் சூரியகிரகணம் இல்லை; ஆனால் பாதிப்பு உண்டு…!


இன்று நடக்கவிருக்கும் சூரியகிரகணம் அமெரிக்காவில் மேற்கத்திய நேரக்கணக்குப் படி, மதிய வேளை 1 மணிக்கும், பசிபிக் நேரக்கணக்கின் படி காலை 9.50 மணிக்கும் தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 21ம் தேதியன்று இரவு 10.39 மணிக்கு மேல் கிரகணம் உச்சம் பிடிக்கிறது. ஆனால் இந்தியாவில் கிரகணம் தெரியாது. மேலும் கிரகண கதிர்வீச்சுகளால் எவ்வித பதிப்புகளும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





அமெரிக்காவில் முழு கிரகணமும், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அரையளவு கிரகணம் மட்டுமே தென்படும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.











பாதிப்புகள் உண்டு:





பொதுவாக 15 நாட்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் இரண்டும் ஏற்பட்டிருப்பதால், நாட்டின் அரசாங்க விஷயங்களில் பாதிப்புகள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். இயற்கை பேரிடர்கள் உருவாகவும், பிரபலமானவர்கள் மரணம் எய்தவும் நடக்கலாம் என பஞ்சாங்கம் கூறுகிறது.





கடல்சீற்றம், தொடர்மழை, வெள்ளம் என இயற்கை சேதங்களும் ஏற்படலாம். அல்லது நாட்டின் பொருளாதார அம்சங்களான பங்குச்சந்தைகள், நிதியியல் வளர்ச்சிகளில் பாதிப்புகள் நிகழும் எனவும் பஞ்சாங்கம் எடுத்துரைக்கிறது.







இந்தியாவில் பாதிப்புகள்:





இந்தியாவில் கிரகணத்தின் கதிர்வீச்சுகள் படவில்லை என்றாலும் அதன் மறைமுக தாக்கங்கள் நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் என ஆரூடர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்