இந்தியாவின் எதிர்காலத்தை சுதந்திரத்திற்கு முன்பே உரக்கச் சொன்ன இங்கிலாந்து பிரதமர்!


இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருப்போம். சுதந்திரம் பிறந்த கதையையும், அதற்காக நடந்தேறிய மீப்பெரும் போராட்டங்களையும் அதன் தாக்கங்களையும், தியாகங்களையும் நாம் கேட்டு வளர்ந்துள்ளோம். ஆனால் நமது நாட்டினுடைய சுதந்திரத்தை அடைவதற்கு முன்பாக அதை கைப்பற்றியிருந்தவர்களில் மிக முக்கியமானவர் இங்கிலாந்து இளவரசர் வின்சென்ட் சர்ச்சில். எந்த நிலையிலும் இந்திய நாடு சுதந்திரத்தை பெற்றுவிடக் கூடாது என்பதிலும் இந்திய அரசியல் மலர்ந்துவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருந்தார். இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் துவக்கப் போர்களில் முன்னோடியாக திகழ்ந்த இவரது நடவடிக்கைகள் இந்திய சுதந்திரத்திற்கு எவ்வாறு தடையாக இருந்தது? அவர் ஏன் இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் என சொல்லப்படுபவர்களை புறந்தள்ளினார்? என்பதற்கான காரணங்களை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.











காந்தி கேட்ட கேள்வி:





இரண்டாம் உலகப்போர் வந்தபோது இங்கிலாந்தினுடைய பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஹிட்லரின் நாஜிப்படைகளை எதிர்ப்பதற்காக இந்தியத் துருப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார். இந்தியாவின் துருப்புகளை அவ்வாறு அவர் தவறாக பயன்படுத்திக் கொல்லும் பொழுதில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக காந்தி ஒரு கேள்வியை முன்னெழுப்புகிறார். ஹிட்லர் உங்களுக்குத்தான் எதிரி; எங்களுக்கு அல்ல. ஆக, உங்களுக்கும் அவருக்கும் இடையிலான போரில் நீங்கள் எப்படி எங்களது இந்தியத் துருப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள்? இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்று கேட்கிறார்.





சர்ச்சிலின் திமிர் பதில்:





வின்சென்ட் சர்ச்சில் மிகவும் அமைதியாக பதில் இசைக்கிறார். எவ்வாறெனில், நான் என்னுடைய மரபுமிக்க தொன்மைமிகு பெருமையை உடைய பிரிட்டனை மீண்டும் பெறுவதற்காகதான் இந்தியத் துருப்புகளை எனது போராட்டத்தில் கலக்கச் செய்கிறேன் என திமிராகவே சொல்கிறார்.





இந்திய ராணுவத்தின் நிலை:





அடிமைப்படுத்திய நாட்டின் இராணுவத் துருப்புகளை தனது சொந்த நாட்டிற்காக பயன்படுத்தி தனது பலத்தை நிரூபிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? என்று காந்தியாருக்கு கோபம் கொப்பளிக்கிறது. காந்தி சொல்கிறார், இந்த போரினால் எனது இந்திய சகோதரன் வாழ்வை இழக்கப் போகிறான். குத்துயிரும் குலையுயிருமாக போரில் மாண்டு, இளம் மனைவிகளை விதவையாக்கிடப் போகும் வீரர்களை கண்ணெதிரில் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் உங்களுடைய தொன்மையான பிரிட்டனை மீட்கப் போவதாகச் சொல்கிறீர்கள். எங்களுடைய சிப்பாய்களை உங்களது நாட்டிற்காக பலிகொடுக்கப் போகிறோம் என்று எங்களிடமே சொன்னால் இது உங்களுக்கு திமிரல்லவா? என்று கேட்கிறார்.





அம்பேத்கரிடம் தடுமாறிய காந்தி:





அடுத்தநாள் அம்பேத்கர் தனது கேள்விகளுடன் முன்வருகிறார். காந்தி கேட்கிற கேள்வி மிக நியாயமான கேள்வி என்றாலும், நான் இங்கு காந்தியைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்கிறேன். வின்சென்ட் சர்ச்சிலுக்கு இந்தியத் துருப்புகளை தாரைவார்ப்பதால் என்ன பயன் என்று கேட்கிறீர்களே? நான் கேட்கிறேன். இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீங்கள் கேட்கும் பட்சத்தில், அந்த சுதந்திரத்திற்குப்பின்னால் எனக்கும், எனது பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் என்ன கிடைக்கப்போகிறது? இந்த கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீங்கள் சர்ச்சிலிடம் கேள்வி கேளுங்கள் என்று அம்பேத்கர் கேட்டபோதுதான் காந்தி தடுமாறிப் போனார். இது வரலாறே ஸ்தம்பித்த தருணமும் கூட.







வின்சென்ட் விவாதம்:





அம்பேத்கர் எழுப்பிய அதே கேள்வியை, வின்சென்ட் சர்ச்சிலும் தனது கருத்தோட்டமாக முன்வைத்தார். இந்தியாவிற்கு ஏன் சுதந்திரம் வழங்கப்படக் கூடாது என்ற விவாத உரையையும் அவர் நிகழ்த்தியிருந்தார்.
அதில் அவர் பேசியதாவது:
“இந்திய சுதந்திரத்திற்கு பின், அந்நாட்டினுடைய அரசியல் அங்கத்தை முட்டாள்களும், கைக்கூலிகளும் கையகப்படுத்துவார்கள். விடுதலைக்காக இந்தியர்களாக ஒருங்கிணைந்த மக்களின் மனநிலையையும், பாரம்பரியத்தையும் சிதைக்கும் செயல்களில் ஈடுபடுவர்கள். சுதந்திர இந்தியாவானது ஒற்றுமையான இந்தியாவாக திகழாது. மக்களை கட்சிகள் மற்றும் மதங்கள் அடிப்படையில் இரண்டாக பிரித்தாளும் சூழல் உருவாக்கப்படும். இயற்கையின் அம்சங்களான காற்றுக்கும், தண்ணீருக்கும் கூட வரிவிதிக்கப்படும். இந்தியாவிற்கு சுதந்திரம்
தரக்கூடாது.தந்தால் சுதந்திரத்தை காப்பாற்றமாட்டார்கள். பணத்திற்காகவும்,
பதவிக்காகவும் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு சாவார்கள். இந்திய அரசியல்வாதிகள் நாவில் சர்க்கரையையும் நெஞ்சில் வஞ்சகத்தையும் வைத்திருப்பவர்கள். முட்டாள்கள் இருக்கும் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள். தேர்தல் மூலம் சில ஊழல்வாதிகளையும் தகுதியற்றவர்களையும் நியமனம் செய்வதுதான் இந்திய விடுதலை வேட்கையாளர்கள் பேசும் ஜனநாயகம்” என்று பேசியிருந்தார்.





வாக்கு பலித்தது:





அன்று அவர் பேசிய ஒவ்வொரு வரியும் இன்று இங்கே நடப்பு அரசியலாக உருவாகியிருப்பதை நிச்சயமாக நம்மால் மறுக்க முடியாது. மொழித் திணிப்பு, வரிவிதிப்புகள், திட்டமிடப் படாத அரசாணைகள், பண அரசியல், மத அரசியல், அதிகாரவர்க்க வளர்ச்சி, மக்கள் மீதான திணிப்புகள், ஊழல்வாதம், கருத்துச் சுதந்திர பறிப்பு, எமெர்ஜென்சி என இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ நிகழ்வுகளை பார்த்துப் பார்த்து, அவற்றை எதிர்த்துப் போராடி போராடி அலுத்துவிட்டோம்.





உண்மையிலேயே நமக்கான சுதந்திரத்தை பெற்றுவிட்டோமா? என்று உங்களுக்குள் கேள்விகள் அசரீரி ஒலிக்கிறது என்றால் நீங்களும் இந்தியரே!!






Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்