Posts

Showing posts from 2020

ஜனவரி 1முதல் அரசு விதிகளின் இத்தனை மாற்றங்களா?பொதுமக்களே வருகிற ஆண்டு செலவு மிகுந்த ஆண்டாக இருக்கும்...

Image
ஜனவரி 1, 2021 முதல் பல்வேறு புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. நேர்மறை ஊதிய முறை': செப்டம்பர் மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) காசோலைகளுக்கு 'நேர்மறை ஊதிய முறை' அறிவித்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) 2021 ஜனவரி 1 முதல் இந்த முறையை அறிவித்துள்ளது. இதன் கீழ், ரூ .50,000 க்கும் அதிகமான காசோலை பரிவர்த்தனைகளுக்கு முக்கிய விவரங்களை மறு உறுதிப்படுத்தல் தேவைப்படும். காசோலை வழங்குபவர் தேதி, பயனாளியின் பெயர், பணம் செலுத்துபவர், தொகை போன்ற விவரங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். மின்னணு முறையில், எஸ்எம்எஸ், மொபைல் வங்கி, இணைய வங்கி, ஏடிஎம் போன்றவற்றிக்கும் பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்: எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்கின்றன. விலைகளை அதிகரிக்கலாம், மாறாமல் வைக்கலாம் அல்லது குறைக்கலாம். சரல் ஜீவன் பிமா பாலிசி: காப்பீட்டு நிறுவனங்கள் சரல் ஜீவன் பீமா பாலிசியை அறிமுகப்படுத்தும், இது ஒரு நபர் குறைந்த பிரீமியம் தொகையில் கூட ஒரு...

உங்கள் ரேஷன் கார்டில் இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?" நீங்களே பாருங்கள்

Image
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும். PHH (Priority house hold) - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன. PHH - AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana): இந்த வகையான ரேஷன் கார்டுகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தரப்படும்.இவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும் இந்த வகையான அட்டைகள் விதவை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். NPHH ( Non Priority House Hold) - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்து...

சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதமுள்ளது என்று எப்படி கண்டறிவது...? எளிய வழி இதுதான்...

Image
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து வருவதால், ஒரு சிலிண்டர் பல மாதங்களாக பயன்படுத்துவது கடினம். ஒவ்வொரு நபரும் சிலிண்டரை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே அதை அதிகமாக இயக்குவதற்கான தந்திரங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பயன்படுத்தப்படும் சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம். பெரும்பாலும் மக்கள் அதை அசைத்து, சிலிண்டரில் இவ்வளவு கேஸ் இருக்கும் என்று யூகிக்கிறார்கள், ஆனால் இந்த முறை முற்றிலும் தவறானது. அப்போ சரியான வழியை அறிந்து கொள்ளுங்கள் .. நீங்கள் வீட்டில் ஒரு புதிய சிலிண்டரை பொருத்தும் போது, ​​அது முதலில் நன்றாக வேலை செய்கிறது. அடுப்பில் வெப்பம் வரத் தொடங்கும். பின்னர் ​​சிலிண்டரை மாற்றுவதற்கான நேரம் இது என்று நீங்கள் யூகிக்கிறீர்கள். சிலிண்டரின் எடையின் படி, அதில் எவ்வளவு வாயு இருக்கும் என்று நீங்கள் கணக்கிட்டு கொள்கிறீர்கள். ஆனால் இந்த வழியில் நீங்கள் எவ்வளவு வீணடிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு சிலிண்டரில் எரிவாயுவை அளவிடும் இந்த முறை முற்றிலும் தவறானது. இந்த வழியில் சிலிண்டரில் வாயுவை...

காலையில் எழுந்தவுடன் படுக்கை தலையணையை எடுக்க சொல்வது ஏன்?

Image
நாம் வீட்டில் இரவு உறங்கிவிட்டு காலை எழுந்ததும், நாம் படுத்திருந்த பாய் மற்றும் தலையணை, போர்வை போன்றவற்றை மடித்து ஓரமாக வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அல்லது நமது பாட்டி / தாத்தா போன்றோர் கூறியதை நாம் கேட்டிருப்போம். எதற்காக அவர்கள் இதனை கூறுகிறார்கள் என்று இனி அறிந்துகொள்ளலாம். அன்றைய காலங்களில் ஏன் இன்றளவும் கூட தம்பதி அல்லது தனிமனிதர் உறங்க தனியாக பெட்ரூம் பெரும்பாலான இடங்களில் கிடையாது. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருசேரவே உறங்கியிருப்போம். அதிக நேரத்தில் ஒரே இடத்தில் உறங்குவதால், அவரின் ஒளி உடலின் தன்மை இருக்கும். காட்டு விலங்குகளுக்கு இதனை உணரும் சக்தி அதிகம். மனிதன் ஓரிடத்தில் இருந்து சிறுது தூரம் சென்றுவிட்ட பின்னரும், மனிதன் இவ்வழியாக சென்றுள்ளான் என்பதை காட்டுவிலங்குகள் அறிந்துகொள்ளும். நமது உடலின் வாசனை போன்றவற்றையும் வைத்து, உடலின் அதிர்வுகளை அறிந்துகொண்டு விலங்குகள் இதனை உணர்ந்துகொள்கிறது. நாம் படுக்கையை மடித்து வைக்காமல் இருந்தால், அதன் மீது ஏறியே அனைவரும் செல்வோம். அதிலேயே மீண்டும் சுத்தம் செய்யாமல் படுத்துகொண்டாள் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் கேடு ஏற்...

பூஜை அறை டிப்ஸ்

Image
பூஜை அறையினை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதாவது பூஜை அறையில் காய்ந்த அல்லது அழுகிய புகளையோ அல்லது பழங்களையோ வைக்க கூடாது. அதேபோல் மஞ்சள், குங்குமம் மற்றும் விபூதியை பூஜை அறையில் மூட்டை மூட்டையாக வைக்க கூடாது. அதனை வைக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக எடுத்து வைக்க வேண்டும். * பூஜை அறை சாமி படங்கள் வைக்கும் திசை:- தெய்வங்களின் உருவ படங்களை பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி வைத்து வழிபட வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கலாம்.

இன்று வானில் மேற்கு திசையில் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும்

Image
வானில் அதிசய நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். சென்னை,  வானில் அதிசய நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்கலாம். இதுதொடர்பாக சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:- “பூமியை ஒத்த கிரகம் என கருதப்படும் செவ்வாய்க்கோள், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி பூமிக்கு மிக அருகில் வந்தது. அதேபோல் வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று (திங்கட்கிழமை) பூமிக்கு அருகில் வருகின்றன. வாயு பெருங்கோள்களான சனியும், வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன. சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவ...

மொய் வைக்கும் போது "ஒரு ரூபாய்"சேர்த்து வைப்பது ஏன்..?சொல்லுங்க பார்ப்போம்..!!

Image
நாம் மொய் செய்கையில் குறிப்பிட்ட தொகையுடன் எப்போதும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மொய் தருகிறோம். அதற்கு காரணம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம். கல்யாணம், காது குத்து, கிரகப்பிறவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்? ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக்காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தன. அதுவும் சும்மா இல்லை ஒரு வராகன் பொன் என்பது 32 குண்றி எடை!! (குண்டுமணி) அந்த 32 என்பது, முப்பத்து இரண்டு வகையான தர்மங்களைக் குறிப்பது. எனவேதான் இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயம். இதை நீங்களும் தர்மம் வழுவாமல் செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும்வகையில் இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்புமிக்க உலோக நாணயங்களினால் வழங்கப்பட்டு வந்தது. அதனால், மொய் ச...

எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் ஓடாதிங்க! இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க!

Image
நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய நோய்களையும் நிறைய பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம்.அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, எதற்கு எடுத்தாலும் டாக்டரிடம் சென்று பணத்தை செலவழிக்காமல் ஒருசில இயற்கை வழி முறையை பயன்படுத்தி வீட்டிலேயே வரும் முன் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.    1. உடல் அசதி இருந்தால் முருங்கைக் கீரையை காம்புடன் சேர்த்து ரசம் வைத்து குடித்து வர அசதி குறையும். 2. தொண்டை வலி, தொண்டை அடைப்பு உள்ளவர்கள் பசும்பாலில் ஓமம் சேர்த்து காய்ச்சி காலையில் குடித்து வர தொண்டை வலி குணமடையும். 3. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இஞ்சி சாற்றை கொதிக்க வைத்து சம அளவு தேன் சேர்த்து இரவு உணவுக்குப் பின் குடித்துவர உடல் பருமன் குறையும். 4. வயிற்றுப்போக்கு போக இஞ்சியை இடித்து சாறு பிழிந்து அதில் உப்பு சேர்த்து குடிக்க வயிற்று பேதி நிற்கும். 5. உதடு சிவப்பு நிறமாக மாற ஆசைப்படும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புதினா இலை, கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து உதட்டில் பூசி வர உதடு சிவப்பாகும். 6. அல்சரால் வரும் வாய் புண் குணமாக கசகசாவை தூளாக்கி பசும்பால் கலந்து இரவு வேளையில் சாப்பிட்...

எல்லா நோய்களுக்கும் ஒரே பாடல்! பாடலில் நோய்களுக்கு விளக்கம் சொன்ன சித்தர்கள்!

Image
அந்த காலத்தில் சித்தர்கள் அருளிய நோய்களுக்கு எல்லாம் மருந்து தான் இந்த பாடல். இந்தப்பாடல் காலத்தால் அழியாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் நோய்க்கு மருந்து தான் இதை யாராலும் மாற்ற முடியாது. இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.    நம் முன்னோர்கள் லேசு பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக ஒரே பாடலை பாடியுள்ளனர். இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இது இருந்தால் யாரும் மருத்துவரை நம்பி ஓட வேண்டியதில்லை. சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்...

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது ஏன் தெரியுமா?

Image
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம் உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால் அதன் விளைவாக உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்பட்டு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஏன் வடக்கு கூடாது? பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த திசையில் தூங்கலாம்? கிழக்கு திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். குழந்தைகள் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையு...

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார்.

Image
அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60. உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.

வட தமிழகத்தில் கன மழை தொடரும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

Image
தீவிர புயல் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழந்து அதிக மழையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை , அதி தீவிர புயலாக நள்ளிரவு கரையைக் கடக்கத்தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து  நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து  இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:   அதி தீவிர புயல் நிவர், புதுவை அருகே நேற்று இரவு 11.30 மணிக்கும் இன்று அதிகாலை 2.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்திற்கு இடையே கரையக் கடந்தது. தற்போது அது வலுவிழந்து தீவிர புயலாக உள்ளது. தொடர்ந்து இந்தப் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் மழை தொடரும். பலத்த காற்றும் வீசக்கூடும்” என்றார். 

இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் - தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் தகவல்

Image
இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என் பிரதான் தகவல் தெரிவித்து உள்ளார். சென்னை வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40கி.மீ வேகத்தில் வீசுகிறது. சென்னையில் மணிக்கு 60கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இரவு எட்டு மணிக்கு பிறகே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கும். இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என் பிரதான் தகவல் தெரிவித்து உள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது  தமிழகத்தில் பல ஊர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமா...

நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Image
நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது.நேற்று காலை புயலாக வலுவடைந்தது.இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை என தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.இந்நிலையில் சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்...

Image
வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை , வங்க கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கடந்து செல்லும்போது கடலோர மாவட்டங்களில், 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.  இதேபோன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நிவர் புயல் எதிரொலியாக இன்று 3 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழு, மோட்டார் இயந்திரங்கள், கடலோர காவல் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ...

நிவர் புயலால் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யும் இடங்கள் எவை?

Image
‘நிவர்’ புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, ‘நிவர்’ புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 24-ந் தேதி (இன்று) மழை பெய்யும் மாவட்டங்கள் எவை? நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 25-ந் தேதி (நாளை) மழை பெய்யும் மாவட்டங்கள் எவை? நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும். திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மப...

நிவர் புயல் முன்னெச்சரிக்கை: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Image
நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.  இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். இந்த புயலுக்கு ‘நிவர் புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,  கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் சீற்றம் ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புயல் மற்றும் கனமழையை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

சபரிமலை பற்றிய சிறப்பு தகவல்கள்

Image
கேரளாவில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோவில், மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வருகை தருவார்கள். அதுவும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டும் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாடு நடைபெற உள்ளது. எனவே வருகிற கார்த்திகை 1-ந் தேதி முதல் பக்தர்கள் பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்வார்கள். இந்தக் கோவிலின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். * சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் மேற்கூரைப் பகுதியில் ‘ தத்துவமசி ’ என்று எழுதப்பட்டிருக்கும். இதற்கு ‘நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே இருக்கிறாய்’ என்பது பொருளாகும். * சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள், 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. * சபரிமலை ஐயப்பனை நினைத்து மாலை அணிபவர்கள், அந்த மாலை தன் நெஞ்சில் படும்போதெல்லாம், ஐயப்பன் நம் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை உணர்வதாக...

பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்;அடுத்த 20நாட்களுக்கு நீங்கள் பார்க்கலாம்!

Image
விஞ்ஞானிகள் சி / 2020 எஃப் 3 நியோவிஸ் (C/2020 F3 NEOWISE) என்ற வால் நட்சத்திரம் மார்ச் மாதத்தில் சூரியனை நெருங்கி வருவதைக் கண்டுபிடித்தனர். இப்போது, அது பூமியிலிருந்து எளிதாக காணப்படும...

தமிழகத்தில் 7,500 கோடி முதலீடு செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம்.6000 பேருக்கு வேலை வாய்ப்புகள்.இனி ஐபோன் விலை இங்கு குறையுமா...?

Image
ஐபோன் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனது கிளையில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதனால் 6000 பேருக்கு வேலை வாய்ப்...

வைரஸ் தொற்று நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் இந்த 5 பழங்கள் கிடைச்ச விட்டுறாதிங்க..!!!

Image
வாழைப்பழங்கள் : வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஃபைபர், வைட்டமின்கள் ஏ, சி, பி 6, மெக்னீசியம், ஃபோலேட், ரைபோஃப்ளேவின், நியாசின் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன. உயர் இர...

கவிஞர் பாரதிதாசனின் ஒரே மகன் காலமானார்!

Image
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான, தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி, இன்று பிற்பகலில் பு...

"மக்களே உஷார்" கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள் என்னென்ன..??

Image
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் ரஷ்யாவை விஞ்சி இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரு கோடியே 14 லட்சம் பேர் பாதிக்கப்பட...

புதுமையான திட்டம் தொடங்கியது: சென்னை போலீஸ் கமிஷனர் ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் பேசினார்

Image
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றவுடன் தனது கனவு திட்டத்தை தொடங்கிவிட்டார். அவர் அறிவித்த முதல் திட்டமான பொதுமக்களுடன் ‘வீடியோ கால்’ மூலம் பே...