"மக்களே உஷார்" கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள் என்னென்ன..??
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் ரஷ்யாவை விஞ்சி இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரு கோடியே 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.5 லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் 6 லட்சத்து 81 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனையடுத்து ஏற்கனவே காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கொரோனா அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகளை அவ்வபோது அறிவித்து வருகிறது.
மேலும் கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் புதிய அறிகுறிகளாக மாறியுள்ளன. எனவே இந்த புதிய அறிகுறிகள் இருப்பது தெரிந்தவனுடன் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment