நிவர் புயலால் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யும் இடங்கள் எவை?

‘நிவர்’ புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

‘நிவர்’ புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

24-ந் தேதி (இன்று) மழை பெய்யும் மாவட்டங்கள் எவை?

நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.

சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

25-ந் தேதி (நாளை) மழை பெய்யும் மாவட்டங்கள் எவை?

நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.

திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். ஏனைய வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்