பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்;அடுத்த 20நாட்களுக்கு நீங்கள் பார்க்கலாம்!
விஞ்ஞானிகள் சி / 2020 எஃப் 3 நியோவிஸ் (C/2020 F3 NEOWISE) என்ற வால் நட்சத்திரம் மார்ச் மாதத்தில் சூரியனை நெருங்கி வருவதைக் கண்டுபிடித்தனர். இப்போது, அது பூமியிலிருந்து எளிதாக காணப்படும் என்றும், இன்று (ஜூலை 14) தொடங்கி வரும் சில நாட்களுக்கு அதை நாம் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வடமேற்கு பகுதியில் வானத்தில் அந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் காணலாம்.
"ஜூலை 14 முதல், சி / 2020 எஃப் 3 நியோவிஸ் என்ற வால் நட்சத்திரம் வானத்தில் வடமேற்கு திசையில் தெளிவாகத் தெரியும். அடுத்த 20 நாட்களுக்கு சுமார் 20 நிமிடங்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இது தெரியும்.
மக்கள் அதை வெறும் கண்களால் பார்க்க முடியும்" என்று புவனேஸ்வரில் உள்ள பதானி சமந்தா பிளேனடேரியத்தின் (Pathani Samanta Planetarium) துணை இயக்குநர் டாக்டர் சுபேந்து பட்நாயக் கூறினார்.
இந்த வால் நட்சத்திரம் சுமார் 7,000 ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்கு ஒரு சுற்றுப்பாதையை கொண்டுள்ளது. எனவே அது மீண்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அல்லது சூரியனுக்கு அருகில் வரும். எனவே அதனை பார்க்க நமக்கு இது ஒரே வாய்ப்பு.
வால் நட்சத்திரத்தை தெளிவான பார்க்க தொலைநோக்கியின் உதவியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். வெறும் கண்களாலும் இதை காண முடியும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜூலை 3 ஆம் தேதி, நியோவிஸ் சூரியனுக்கு மிக அருகில் வந்தது. வால் நட்சத்திரங்கள் பல்வேறு வகையான பனிக்கட்டிகளிலிருந்து உருவாவதால், சூரியனுக்கு அருகில் சென்றதால் பல்வேறு எதிர்வினைகள் ஏற்பட்டன.
வால் நட்சத்திரங்கள் மறைந்து போவதற்கு முன்பு ஜூலை 22 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அது விண்வெளியில் தனது பயணத்தை நோக்கி விரைவாகச் செல்வதால் ஜூலை மாதத்திற்குப் பிறகு தெரியாது.
Comments
Post a Comment