இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் - தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் தகவல்

இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என் பிரதான் தகவல் தெரிவித்து உள்ளார்.
சென்னை

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40கி.மீ வேகத்தில் வீசுகிறது. சென்னையில் மணிக்கு 60கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இரவு எட்டு மணிக்கு பிறகே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கும்.

இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என் பிரதான் தகவல் தெரிவித்து உள்ளார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது  தமிழகத்தில் பல ஊர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பேர் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரியில் ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்