தமிழகத்தில் 7,500 கோடி முதலீடு செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம்.6000 பேருக்கு வேலை வாய்ப்புகள்.இனி ஐபோன் விலை இங்கு குறையுமா...?


ஐபோன் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனது கிளையில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.


இதனால் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கா சீனா வர்த்தக போர் கடுமையாக நீடித்து வருகிறது.  இதனால் சீனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.


 அதனால் ஒப்பந்த அடிப்படையில் ஐ போன்களை தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தை சீனாவிற்கு வெளியே தயாரிப்பு பணிகளை செய்ய ஆப்பிள் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.


 அதன் அடிப்படையிலேயே பாக்ஸ்கான் நிறுவனம் தனது ஸ்ரீபெரும்புதூர் கிளையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.  .


 சீனாவில் தயாரான ஆப்பிள் செல்போன்கள் இனி ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும்.  .


 சீனா மீது அதிருப்தியில் இருக்கும் நாடுகளை கண்டறிந்து அவற்றை முறையாக அணுகியதன் பலனாகவே தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி